
வீண் பேச்சுக்கு முக்கியத்துவம் தராத விருச்சிக ராசி நேயர்களே..!!
நடைபெற இருக்கின்ற குருப்பெயர்ச்சியில் விருச்சிக ராசிக்கு இரண்டாம் இடத்தில் இருந்துவந்த குருதேவர் ராசிக்கு மூன்றாம் இடமான தைரிய வீரிய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். குருதேவர் தான் நின்ற இடத்திலிருந்து ஐந்தாம் பார்வையாக விருச்சிக ராசியின் ஏழாம் இடமான களத்திர பாவத்தையும், தன்னுடைய ஏழாம் பார்வையாக ராசிக்கு ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தையும், தன்னுடைய ஒன்பதாம் பார்வையாக ராசிக்கு பதினொன்றாம் இடத்தையும் பார்க்கின்றார்.
எந்தவொரு செயலையும் மேற்கொள்ளும்பொழுது பொறுமையுடனும், நிதானத்துடனும் மேற்கொள்ள வேண்டும். பாதியில் தடைப்பட்டு நின்ற வேலைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வீடு, மனை போன்றவற்றை மனதிற்கு பிடித்த விதத்தில் மாற்றி அமைப்பதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் ஒன்று சேர்வதற்கான சூழ்நிலைகள் சாதகமாக அமையும்.
பெண்களுக்கு :
திருமணம் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறும். தாய்மாமன் வழி உறவினர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். ஆன்மீகம் தொடர்பான பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். தந்தையின் உடல் ஆரோக்கியம் தொடர்பான குறைபாடுகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும்.
மாணவர்களுக்கு :
மாணவர்கள் கல்வி தொடர்பான செயல்பாடுகளில் கவனத்துடன் செயல்பட வேண்டும். ஆசிரியர் வழிகாட்டுதலைப் கேட்டு அதன்படி நடந்து கொள்வது நன்மையை அளிக்கும். ஆராய்ச்சி தொடர்பான கல்வி பயிலும் மாணவர்களுக்கு எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறும்.
உத்தியோகஸ்தர்களுக்கு :
உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு தடைப்பட்டு இருந்த பதவி உயர்வு கிடைக்கும். பூர்வீக சொத்துக்களை மனதிற்கு பிடித்த விதத்தில் மாற்றி அமைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வேலை தேடுபவர்களுக்கு திறமைக்கு ஏற்ப வேலை வாய்ப்புகள் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.
கலைஞர்களுக்கு :
கலை தொடர்பான பணியில் இருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். புதிய தொழில்நுட்பங்களின் மூலம் திறமைகளை பிரபலப்படுத்துவதற்கான உதவிகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். நுட்பமான சிந்தனைகளின் மூலம் அனைவராலும் பாராட்டுகளை பெறுவதற்கான சூழல் உண்டாகும்.
அரசியல்வாதிகளுக்கு :
அரசியல் சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி கொள்வதற்கான தருணங்கள் சாதகமாக அமையும். பலதரப்பட்ட மக்களுடைய தொடர்புகளின் மூலம் புதுவிதமான அனுபவங்கள் கிடைக்கும். உயர்மட்ட குழுக்கள் மற்றும் தொண்டர்களிடத்தில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும்.
விவசாயிகளுக்கு :
விவசாய பணியில் இருப்பவர்களுக்கு பொருளாதாரத்தில் மேன்மையான சூழல் உண்டாகும். புதிய பயிர் விளைச்சல்கள் தொடர்பான செயல்பாடுகளில் தகுந்த ஆலோசனைகளை பெற்று மேற்கொள்வதன் மூலம் லாபம் அதிகரிக்கும். செயற்கை உரங்களை காட்டிலும், இயற்கை முறையிலான உரங்களை பயன்படுத்துவதன் மூலம் விளைச்சல்களை அதிகப்படுத்த முடியும்.
வியாபாரிகளுக்கு :
தொழில் தொடர்பான செயல்பாடுகளில் பொருளாதார சிக்கல்கள் நீங்கி லாபம் மேம்படும். கூட்டாளிகளின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். இணையம் தொடர்பான வியாபாரத்தின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
வழிபாடு :
செவ்வாய்க்கிழமைதோறும் வராஹி அம்மனை நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்துவர முயற்சிகள் மற்றும் பொருளாதாரத்தில் இருந்துவந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.
குறிப்பு: படங்கள் அனைத்தும் மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே
ஆன்மிகமும் - ஜோதிடமும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக