Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 26 அக்டோபர், 2020

கன்னி ராசியில் புதன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

🌟 கன்னி ராசியின் அதிபதி புதன் ஆவார். புதன் இங்கு ஆட்சி பெறுவது மட்டுமல்லாமல், உச்சமும் அடைகின்றார். அதனால் அவரின் பலமும் அதிகரிக்கின்றது. இதனால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்கள் பின்வருமாறு :

🌟 எளிதில் மற்றவர்களை கவரும் தோற்றமும், ஈர்க்கும் அமைப்பையும் கொண்டவர்கள்.

🌟 எந்த நிலையானாலும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

🌟 நல்ல உள்ளமும், எண்ணமும் உடையவர்கள்.

🌟 இனிமையான குரல் வளம் உடையவர்கள். 

🌟 எதிரிகளையும் திருத்தி தன் வசம் வைத்துக்கொள்ளும் சாதுர்த்தியசாலிகள்.

🌟 எதிலும் பெருந்தன்மையாக நடந்துக் கொள்ளக்கூடியவர்கள்.

🌟 தர்ம சிந்தனையும், தானம் செய்வதிலும் ஈடுபாடு உடையவர்கள். 

🌟 சிந்தித்து செயல்படுபவர்கள். தவறுகள் ஏற்பட்டாலும் அதை சாமர்த்தியமாக சமாளிக்கும் திறமை உடையவர்கள். 

🌟 எடுத்த செயலில் உள்ள நிறை மற்றும் குறைகளை நன்கு அறிந்தவர்கள். 

🌟 சூழ்நிலைக்கேற்றாற் போல் தன்னை மாற்றிக் கொள்ளக்கூடியவர்கள்.

🌟 மற்றவர்கள் தங்களை புகழ வேண்டும் என எண்ணக்கூடியவர்கள்.

🌟 தன்னைப் பற்றி விளம்பரப்படுத்திக் கொள்வதில் அதிக விருப்பம் உடையவர்கள். 

🌟 ஆன்மீக பணிகளுக்கு செலவு செய்வதில் விருப்பம் உடையவர்கள்.

🌟 கௌரவமின்றி எந்த தொழிலாக இருந்தாலும் செய்யக்கூடியவர்கள். ஆனால், கௌரவம் குறையாத படி நடந்து கொள்ளக்கூடியவர்கள். 

🌟 தனது வெற்றிக்கான ரகசியத்தை எவரிடமும் பகிரமாட்டார்கள்.

🌟 விகடகவியாகவும், சாதுர்யமாகவும் பேசி தனது காரியத்தை நிறைவேற்றிக் கொள்ளக்கூடியவர்கள்.

குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 

இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக