Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 30 அக்டோபர், 2020

2020.. நடைபெற இருக்கும் குருப்பெயர்ச்சியில்.. நீங்கள் யாரை வழிபட வேண்டும்?

குருப்பெயர்ச்சி பலன்கள் 2020... எந்த ராசிக்காரர்கள் யாரை வழிபட வேண்டும்?

நடக்கவிருக்கும் குருப்பெயர்ச்சியில் ஒவ்வொரு ராசிக்காரர்களும் எந்தெந்த தெய்வங்களை வழிபட்டால் சிறப்பாக இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம்..!!

 

மேஷ ராசி :

திருச்செந்தூரில் இருக்கக்கூடிய முருகப்பெருமானை சஷ்டி தினத்தில் சென்று வழிபாடு செய்துவர முன்னேற்றமான வாய்ப்புகளும், உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள்.

 

ரிஷப ராசி :

வெள்ளிக்கிழமைதோறும் சுக்கிர ஓரையில் மகாலட்சுமியை மல்லிகை மலர்கள் சாற்றி வணங்கி வழிபாடு செய்துவர எண்ணத்தெளிவும், காரியசித்தியும், பூர்வீக மேன்மையும் உண்டாகும்.

 

மிதுன ராசி :

வியாழக்கிழமைதோறும் மஞ்சள் பூக்களை கொண்டு குருமார்களை வழிபாடு செய்துவர சுபகாரியம் மற்றும் தொழிலில் இருந்துவந்த காலதாமதங்கள் விலகி சுபிட்சம் உண்டாகும்.

 

கடக ராசி :

தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைதோறும் வெள்ளை மற்றும் மஞ்சள் நிற பூக்களை சமர்ப்பித்து வழிபாடு செய்துவர உத்தியோக உயர்வும், தந்தை வழியில் ஆதரவுகளும் அதிகரிக்கும்.

 

சிம்ம ராசி :

வியாழக்கிழமைதோறும் மலைமேல் அமைந்திருக்கும் சித்தர்களை வெள்ளை மற்றும் நீலநிற பூக்களால் வழிபாடு செய்துவர பூர்வீகம் தொடர்பான பிரச்சனைகளும், உத்தியோகத்தில் இருந்துவந்த தடைகளும் நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.

 

கன்னி ராசி :

வியாழக்கிழமைதோறும் ஸ்ரீராகவேந்திரரை வழிபாடு செய்துவர மனை மற்றும் சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

 

துலாம் ராசி :

சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயரை மஞ்சள் நிற பூக்களால் வழிபாடு செய்துவர முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் நீங்கி முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும்.

 

விருச்சிக ராசி :

செவ்வாய்க்கிழமைதோறும் வராஹி அம்மனை நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்துவர முயற்சிகள் மற்றும் பொருளாதாரத்தில் இருந்துவந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.

 

தனுசு ராசி :

வியாழக்கிழமைதோறும் நவகிரகங்களில் இருக்கக்கூடிய குருபகவானை மஞ்சள் நிற பூக்களால் வழிபாடு செய்துவர எண்ணத்தெளிவும், ஆரோக்கியத்தில் மேன்மையும் உண்டாகும்.

 

மகர ராசி :

வியாழக்கிழமைதோறும் சிவன் கோவிலுக்கு சென்று மஞ்சள் நிற பூக்களை சூட்டி, எள் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வர மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவும், மகிழ்ச்சியும் கிடைக்கப் பெறுவீர்கள்.

 

கும்ப ராசி :

சனிக்கிழமைதோறும் ஜீவசமாதி அடைந்த குருமார்களை வழிபாடு செய்துவர எண்ணத்தெளிவும், புத்துணர்ச்சியும் கிடைக்கப் பெறுவீர்கள்.

 

மீன ராசி :

வியாழக்கிழமைதோறும் நவகிரகங்களில் இருக்கக்கூடிய பிரகஸ்பதியான தேவகுருவிற்கு மஞ்சள் நிற மலர்களை சூட்டி வழிபாடு செய்துவர செயல்பாடுகளில் இருந்துவந்த காலதாமதம் நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக