Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 30 அக்டோபர், 2020

தனுசு ராசியில் புதன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

🌟 தனுசு ராசியின் அதிபதி குருபகவான் ஆவார். தேவர்களின் குருவான பிரகஸ்பதியிடம் புதன் சமம் என்ற நிலையில் இருந்து தரும் சுப மற்றும் அசுப பலன்களை காண்போம்.

🌟 நிர்வாக திறமை உடையவர்கள். இவர்களின் ஆட்சியே இல்லங்களில் இருக்கும்.

🌟 சுதந்திரமான போக்குகளை உடையவர்கள்.

🌟 பொறுப்புகளை விரும்பாதவர்கள்.

🌟 காண்போரை வசீகரிக்கும் தோற்றமும், அதே சமயம் மரியாதையும் உடையவர்கள்.

🌟 செய்யும் செயல்களால் கீர்த்தி அடையக்கூடியவர்கள்

🌟 மனைவியின் மீது அன்பும், அவர்களின் தேவைகளையும் உடனடியாக நிறைவேற்றக்கூடியவர்கள்

🌟 தொழில் சிந்தனைகளும், அதில் உள்ள சில நுணுக்கமான தகவல்களையும் நன்கு உணர்ந்தவர்கள்

🌟 கணக்கு வழக்குகளை விரல் நுனியில் கொண்டவர்கள்.

🌟 அறுசுவை உணவு பிரியர்கள். வெளியில் சாப்பிடுவதை காட்டிலும், வீட்டிலேயே சமைத்து சாப்பிடுவதை தான் விரும்புவார்கள்.

🌟 அனைவரிடம் அமைதியாகவும், நிதானமாகவும் பழகக்கூடியவர்கள்.

🌟 சிறப்பான திறமையும், தொழிலில் மேன்மையும் உள்ளவர்கள்.

🌟 உறவினர்கள் மூலம் ஆதாயம் பெறக்கூடியவர்கள்

🌟 உங்களை நன்கு கவனித்து கொள்ளக்கூடிய வாழ்க்கை துணை அமையும்.

🌟 ஆன்மீக எண்ணங்களும், வேதங்கள் மீது நம்பிக்கையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.

🌟 அரசியல் தொடர்பும், உயர் அதிகாரிகளால் சாதகமான பலன்களும் உண்டாகும்

🌟 அதீத நினைவாற்றலை உடையவர்கள். எவரிடமும், எந்நிலையிலும் எச்சரிக்கை உணர்வோடு செயல்படக்கூடியவர்கள்

🌟 சிறு செயலாக இருப்பினும் மிகுந்த கவனம் உடையவர்கள்.

🌟 சமுதாயத்திற்கு கட்டுப்பட்டு நடக்கக்கூடியவர்கள்.

🌟 எந்த சூழ்நிலையிலும் தன்னுடைய பெயர், குலம் மற்றும் கீர்த்திக்கு குறைவு ஏற்படக்கூடிய வகையில் நடந்துக்கொள்ள மாட்டார்கள்.

குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 

இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக