Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 27 அக்டோபர், 2020

சத்தமில்லாமல் 4 புதிய அம்சங்களை அறிமுகம் செய்த YouTube.!

4 புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன

நம்மில் பெரும்பாலோர் யூடியூப் தளத்தை அவர்-அவர் விருப்பத்திற்கு ஏற்றார் போல் வலைத்தளம் அல்லது ஸ்மார்ட்போன் பயன்பாடு மூலம் தினசரி இந்த வீடியோ சேவையை நாம் பயன்படுத்தி வருகிறோம். அடிப்படையில் இதைப் பெரும்பாலானோர் பொழுதுபோக்கிற்காகப் பயன்படுத்தினாலும் கூட, யூடியூப் தளத்தில் நாம் புதிதாகக் கற்றுக்கொள்ள ஏராளமான பயனுள்ள தகவல்களும் உள்ளது.

தற்சமயம் இந்த யூடியூப் தளத்தில் 4 புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த 4 புதிய அம்சங்களும் இன்று முதல் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பயனர்களுக்கு அணுக கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் யூடியூப் அறிமுகம் செய்துள்ள அந்த நான்கு அம்சங்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

வீடியோ சேப்டர்

Video Chapter அம்சம் முதன் முதலில் கடந்த மே மாதம் டெஸ்க்டாப் பயனர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்ட ஒரு அருமையான அம்சமாகும். இப்போது இது ஸ்மார்ட்போன் பயனர்களுக்கும் அணுக கிடைக்கும். வீடியோ சேப்டர் அம்சம் வீடியோவின் குறிப்பிட்ட செக்ஷன்களை தவிர்க்க பயனர்களை அனுமதிக்கிறது. இனிமேல் பயனர்கள் வீடியோவில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து சேப்டர்களின் பட்டியலையும் ஒவ்வொன்றிலும் அந்த சேப்டரில் அவர்கள் என்ன பார்ப்பார்கள் என்பதற்கான Preview Thumbnail உடன் பார்க்க முடியும்.

ஐகான்களின் மீதான இடமாற்றம்

அதாவது யூடியூப்பிற்கான ஆப் ஸ்மார்ட்போன்களில் உள்ள வீடியோ பிளேயருக்கு Caption button-ஐ நகர்த்தியுள்ளது. மேலும் ஆப்பில் இப்போது உங்களுக்கு autoplay toggle அணுக கிடைக்கும். எனவே இது பயனர்கள் ஆட்டோபிளே வீடியோக்களை மிகவும் எளிமையாக ஆப் அல்லது ஆன் செய்ய வழிவகுக்கும்.

Gesture support-சைகை ஆதரவு

தற்சமயம் யூட்யூப் ஆப்பில்full-screen mode-டிற்கான என்டர் மற்றும் எக்ஸிட் சைகை ஆதரவுகள் அணுக கிடைக்கிறது. ஸ்க்ரீனில் மேல் நோக்கி ஸ்வைப் செய்வதன் மூலம் நீங்கள் full-screen mode-டிற்குள் நுழையலாம் மற்றும் கீழ்நோக்கி ஸ்வைப் செய்வதின் மூலம் screen mode-டில் இருந்து வெளியேறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Suggested actions - பரிந்துரைக்கப்பட்ட ஆக்ஷன்ஸ்

இந்த Suggested actions வசதியானது பயனர்கள் ஒரு சிறந்த அனுபவத்தை பெற முடியும் என்று அது நினைக்கும் போதெல்லாம், பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போனை சுழற்றச் சொல்லியோ அல்லது வி.ஆரில் வீடியோவை இயக்க சொல்லியோ கேட்கும். பின்பு இது தவிர்த்து எதிர்காலத்தில் மேலும் சில பரிந்துரைக்கப்பட்ட க்ஷன்ஸ் அம்சங்கள் இதன் கீழ் அறிமுகப்படுத்தப்படும் என்றும் யூட்யூப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 

இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக