Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 27 அக்டோபர், 2020

ப்ளே ஸ்டோரில் இந்த 21 செயலிகளை எக்காரணம் கொண்டும் டவுன்லோட் செய்யாதீர்கள்!

வழக்கமான கேமிங் ஆப்கள் போன்று தோற்றம்

சைபர் செக்யூரிட்டி நிறுவனமான அவாஸ்ட், ஆட்வேர்களைக் கொண்ட 21 கேமிங் பயன்பாடுகளை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அவாஸ்ட், இந்த வார தொடக்கத்தில் இந்த 21 பயன்பாடுகள் குறித்தும் கூகுளுக்கு தெரிவித்துவிட்டதாக தெரிவித்துள்ளது.

ஆவாஸ்ட் குறிப்பிட்டுள்ள செயலிகள்

பயன்பாடுகளில் மறைக்கப்பட்ட விளம்பரங்களின் தொகுப்புகளில் ஒரு பகுதியாக ஆட்வேர் உள்ளது. மறைக்கப்பட்ட ட்ரோஜன் பயன்பாடு பாதுகாப்பான பயனுள்ள பயன்பாடாக இருப்பது போல் தோற்றமிளிப்பதாக ஆவாஸ்ட் குறிப்பிடுகிறது.

வழக்கமான கேமிங் ஆப்கள் போன்று தோற்றம்

விளையாட்டு, புதிர் போன்ற வழக்கமான கேமிங் ஆப்கள் போன்று தோற்றமளித்து பயனர்களை ஈர்க்கின்றன. கேமிங் பயன்பாடு போன்று தோற்றமளித்து ஊடுருவும் வகையிலான விளம்பரங்களை காண்பிக்கிறது.

யூடியூப்பில் விளம்பரம்

ஆப் இன்டெலிஜென்ஸ் மற்றும் இன்சைட்ஸ் நிறுவனமான சென்சார் டவரின் மதிப்பீடுகளின்படி இந்த பயன்பாடுகள் சுமார் எட்டு மில்லியன் பதிவிறக்கங்களை கொண்டுள்ளது. இந்த செயலிகள் பெரும்பாலும் யூடியூப்பில்தான் விளம்பரம் செய்யப்படுகின்றன.

சமூகவலைதளங்களில் பெருமளவு விளம்பரங்கள்

கூகுள் ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்பவர்கள் பெரும்பாலானோர்கள் இந்த பயன்பாடுகளை யூடியூப் விளம்பரங்கள் மூலமாக கண்டறிந்துள்ளனர். ஆட்வேரை உருவாக்குபவர்கள் வழக்கமான சந்தைப்படுத்துபவர்களைப் போன்றே சமூகவலைதள சேனல்களை அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.

கூகுள் பல்வேறு நடவடிக்கைகள்

இதுபோன்ற ஆப்கள் ப்ளே ஸ்டோரில் நுழைவதைத் தடுக்க கூகுள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ​​தீங்கிழைக்கும் பயன்பாடுகள் அவற்றின் உண்மையான நோக்கத்தை மறைக்க புதிய வழிகளைக் கண்டுபிடித்துக்கொண்டே இருக்கின்றன என தெரிவிக்கப்படுகிறது

ஆட்வேர் கேமிங் செயலிகள்

ஆவாஸ்ட் கண்டறிந்து ஆட்வேர் கேமிங் செயலிகள் குறித்து கூகிள் இன்னும் விசாரித்துக்கொண்டிருப்பதால் தீங்கிழைக்கும் செயலிகள் இன்னும் தளத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நிறுவனம் தீங்கிழைக்கும் செயலிகளை கண்டறிந்ததைப் போன்றே மறைக்கப்பட்ட விளம்பரங்களை கொண்டிருக்கும் தீங்கிழைக்கும் செயலிகளின் அடுத்த பகுதியை தற்போது நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அவாஸ்ட் வழங்கிய பயன்பாடுகளின் பட்டியல் இங்கே.,

  • Helicopter Attack - NEW
  • Assassin Legend - 2020 NEW
  • Helicopter Shoot
  • Rugby Pass
  • Flying Skateboard
  • Iron it
  • Shoot Them
  • Crush Car
  • Sway Man
  • Desert Against
  • Money Destroyer
  • Cream Trip - NEW
  • Props Rescue
  • Rolling Scroll
  • Shooting Run
  • Plant Monster
  • Find Hidden
  • Find 5 Differences - 2020 NEW
  • Rotate Shape
  • Jump Jump
  • Find the Differences - Puzzle Game

    குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 

    இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக