இறைவர் திருப்பெயர் : கோனேசுவரர்
இறைவியார் திருப்பெயர் : பெரியநாயகி அம்மை,
தல மரம் : வாழை,
தீர்த்தம் : அமிர்த தீர்த்தம்்,
தேவாரப் பாடல்கள்
:திருஞானசம்பந்தர்.
தல வரலாறு:
திருணபிந்து முனிவருக்கு இறைவன் குடத்தின் வாயில் வெளிப்பட்டு, குஷ்ட நோயைத் தீர்த்தருளியதால், இப்பெயர் பெற்றது.
கருடன் பூசித்து, அமுதம் பெற்றுத் தானும், தன் தாயும் சாபம் நீங்கப் பெற்ற தலம். இதனால் திருமதிலின் மேல் கருடன் உருவங்கள் உள்ளன.கோச்செங்கணாரின் மாடக் கோயில்.அம்மன் கோயில் நிலமட்டத்தில் உள்ளது.
கோச்செங்கட் சோழன் முற்பிறவியில்
சிலந்தியாய் இருந்து திருவானைக்கா இறைவனுக்கு வலைப்பந்தல் அமைத்து வழிபட்டு இறைவன்
அருளால் சோழ நாட்டின் பேரரசனாக பிறக்கும் பேறு பெற்றான். முற்பிறவியில் தான்
சிலந்தியாக இருந்து செய்த சிவத்தொண்டிற்கு யானை இடையூறாக இருந்த காரணத்தினால் யானை
ஏறாத மாடக் கோவில்களைக் கட்டினான். இத்தலத்தில் உள்ள ஆலயம் கோச்செங்கட் சோழன்
கட்டிய அத்தகைய மாடக் கோவில்களுள் ஒன்றாகும்.
இவ்வூர் திருக்குடவாயில் என்றும் இங்குள்ள கோயில் குடவாயிற்கோட்டம் என்றும்
அழைக்கப்படுகிறது. உயிர்கள் அனைத்தும் அழிந்துவிடக் கூடிய பிரளயம் வந்தபோது
அனைத்து உயிர்களும் அழிந்துவிடகூடாதே என்று சர்வேஸ்வரன் அமிர்தகுடம் ஒன்றைச்
செய்து அதில் உயிர்களையும் அமிர்தத்தையும் வைத்து குடத்தின் முகப்பில் சிவலிங்கமாக
இருந்து பாதுகாத்து வந்தார். காலங்கள் கடந்தன. குடத்தின் வாயிலில் இருந்த
சிவலிங்கத்தை புற்று மூடியது. அப்புற்று வளர்ந்து பேரிய மலை போல் ஆனது. புற்றால்
மூடப்பட்டிருந்த குடத்தை கருடபகவான் மூக்கினால் கொத்தி பிளந்து சிவலிங்கத்தை
வெளிபடுத்தினார். இதனால் இந்த இறைவனை வன்மீகாசலேசர், கருடாத்திரி என்று
அழைக்கப்படுகிறார். அமிர்த துளி விழுந்த இடம் அமிர்த தலமாயிற்று. அமுத நீர்
தேங்கிய இடம் அமிர்த தீர்த்தம் ஆயிற்று. உயிர்களை பலகாலம் காத்து வந்ததால் இறைவன்
கோணேசர் ஆனார். தன் மூக்கால் கொத்தி ஈஸ்வரனை வெளிக்கொணர்ந்த கருடன், ஈஸ்வரன்
அருளால் இந்த ஆலயத்தை கட்டி வழிபட்டார் என்பது புராணம். ஈஸ்வரனால் பாதுகாக்கப்பட்ட
அந்த அமிர்த கலசம் தக்க காலம் வந்ததும் மூன்றாக உடைந்தது. முதல் பாகமாகிய அடிபாகம்
விழுந்த இடம் கும்பகோணமாகவும் ஈசனை ஆதிகும்பேசர் எனவும் அழைக்கப்படலானது. நடுபாகம்
விழுந்த இடம் கலயநல்லூர் இன்றைய சாக்கோட்டை ஆகும் இங்குள்ள ஈசன் அமுதகலசேஸ்வரர்
ஆவார். குடத்தின் முகப்பு அதாவது வாயில் தங்கிய இடமே குடவாயில்(குடவாசல்) ஆயிற்று.
இங்குள்ள தலதீர்த்தத்தின் சிறப்பாக தலபுராணத்தில் கூறும்பொது அமிர்த தீர்தத்தை
தொட்டவருக்கு முற்பிறவியில் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும். இத்தீர்த்தத்தை
அருந்தியவர்கள் புன்ணியவான் ஆகிறார்கள். இதில் ஸ்தானம் செய்ய விரும்பி இது
இருக்கும் திசையில் ஓரடி எடுத்து வைத்தாலே கங்கா ஸ்நானம் செய்த பலனும், சிவலோக
வாழ்வும் பெற்றவர்கள் ஆகிறார்கள். சிவராத்திரியில் பக்தியுடன் இத்தீர்த்தத்தில்
மூழ்கினால், பதினாயிரம் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். மார்கழி திருவாதிரை
நட்சத்திரத்தில் மூழ்கி ஈசனை தரிசிப்பவர் தேவர் ஆகிறார்கள். இதில் ஸ்நானம்
செய்பவர் அனைவரும் அமிர்தமயமான சரீரம் உடையவர்கள் ஆகிறார்கள். இக்கோவிலுக்கு
தொழுநோயால் அவதியுற்ற திருணபிந்து என்ற முனிவர் வழிபட, ஈசன் குடமூக்கில் இருந்து
வெளிப்பட்டு முனிவருடைய தொழுநோயை தீர்த்ததால் குடவாயில் என்ற பெயர் வந்ததாகவும்
கூறப்படுகிறது.
சங்ககாலச் சிறப்பும் பழைமையும் பெற்ற இத்தலம் கும்பகோணம் - திருவாரூர் சாலை வழியில் உள்ள குடவாசல் என்ற ஊரில் சாலை ஓரத்திலேயே கோவில் உள்ளது. மேற்கு நோக்கிய சந்நிதியுள்ள இக்கோவிலுக்கு ராஜகோபுரமில்லை. ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. மேற்புறத்தில் பஞ்சமூர்த்திகள் உருவங்கள் வண்ணச்சுதையில் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. கோயிலுக்கு எதிரில் அமிர்த தீர்த்தம் உள்ளது. இதன் கரையில் ஆதிவிநாயகர் சந்நிதி உள்ளது. முகப்பு வாயில் வழியே உள்ளே நுழைந்ததும் செப்புக் கவசமிட்ட கொடிமரம், கொடிமரத்து விநாயகர் சந்நிதி, பலிபீடம், நந்தி உள்ளன. இடதுபுறம் தெற்கு நோக்கிய பெரிய நாயகி சந்நிதி உள்ளது. அபயவரதத்துடன் கூடிய நின்ற திருக்கோலத்தில் அம்பாள் காட்சி தருகிறாள். அம்பிகையே பிருகத்துர்க்கையாக வழிபடப் பெறுவதால் கோயிலில் தனி துர்க்கையில்லை.
இத்தல முருகன் அருணகிரிநாதரால்
திருப்புகழில் பாடப்பெற்றுள்ளார். திருப்புகழில் இரு பாடல்கள் உள்ளன உள்
பிராகாரத்தில் வடமேற்கு மூலையில், மிகவும் பிரபலமான குடவாயில் குமரன் சந்நிதி
உள்ளது.. மயில் மண்டபம், மகா மண்டபத்துடன் கூடிய சந்நிதியில், வள்ளி-
தெய்வானையுடன் ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களும் உடையவராய் இவர் கிழக்கு
நோக்கி எழுந்தருளியுள்ளார்.
காச்யப முனிவரின் இரண்டு மனைவிகளில் ஒருத்தியான விநதை இளையவள். அவளின் மகன்
கருடன். மகாவிஷ்ணுவிற்கு வாகனமாகவும், பரம பக்தனாகவும் இருந்து "பெரிய
திருவடி" என்று புகழ் பெற்றவர். ஒரு சமயம் கருடனும், அவன் தாய் விநதையும்
மூத்த மனைவியின் அடிமையாக வேண்டிய நிலை ஏற்பட்டது. தாயின் அடிமைத்தனத்தை போக்குவதற்காக
கருடன் பெரியன்னை கேட்டபடி தேவலோகத்தில் இருந்து அமிர்தத்தை எடுத்து வந்தான்.
பூலோகத்தில் குடவாயிலுக்கு அருகே பறந்து வரும்போது ஒரு அசுரன் எதிர்பட்டு அமிர்த
குடத்தை பறிக்க முற்பட்டான். கருடன் அருகிலிருந்த ஒரு பெரிய புற்றின் மீது
தர்ப்பைகளைப் பரப்பி, அதன் மீது குடத்தை வைத்துவிட்டு, அசுரனுடன் மூர்க்கமாகப்
போர் புரிந்து அவனை வீழ்த்தினார். இதற்குள் அந்த புற்றுக்குள்ளே இருந்த இறைவன்
கோணேசப் பெருமான் அந்த அமிர்த குடத்தை மெள்ளத் தம்மிடம் இழுத்துக் கொண்டார்.
அசுரனை வீழ்த்திவிட்டு வந்த கருடன் அமிர்த குடத்தைக் காணாமல் அந்த புற்றைத் தன்
மூக்கால் கிளறியபோது சுவாமி புற்றிலிருந்து வெளிவந்து கருடனுக்கு தரிசனம் தந்தார்.
கோணேசப் பெருமான் அருளாணைப்படி கருடன் இத்தலத்தில் இறைவனுக்கு ஆலயம் ஒன்றை
எழுப்பினார். கருடாழ்வார் கொண்டு வந்த அமிர்தத்தால் அபிஷேகம் செய்யப்படவராதலால்
கோணேசர் அமிர்தலிங்கமானார். அமிர்த துளிகள் சிந்தியதால் ஆலயத்திற்கு எதிரிலுள்ள
தீர்த்தம் அமிர்த தீர்த்தம் ஆயிற்று. திருணபிந்து முனிவர் பூஜிக்க இறைவன்
திருக்குடத்திலிருந்து வெளிப்பட்டு முனிவர் நோயினை நீக்கயருளிய தலம் இதுவாகும்.
அனுமனும் இத்தல இறைவனை வழிபட்டிருக்கிறார். அவர் திருவுருவங்கள் இங்குள்ளன.
போன்:
+91-
94439 59839.
அமைவிடம் மாநிலம் :
தமிழ் நாடு கும்பகோணம் - திருவாரூர் சாலை வழியில் உள்ள குடவாசல் என்ற ஊரில்
இத்தலம் இருக்கிறது. திருவாரூரிலிருந்து 16 கி.மீ. தொலைவிலும்,
கும்பகோணத்திலிருந்து 15 கி.மீ. தொலைவிலும் இத்தலம் உள்ளது. கொரடாச்சேரி,
நீடாமங்கலம், வலங்கைமான் மற்றும் நன்னிலம் ஆகிய இடங்களிலிருந்தும் குடவாசல் செல்ல
பேருந்து வசதிகள் உள்ளன. திருப்பெருவேளூர், திருதலையாலங்காடு என்ற பாடல் பெற்ற
சிவஸ்தலங்கள் அருகில் இருக்கின்றன..
இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல்
இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
திருணபிந்து
முனிவருக்கு இறைவன் குடத்தின் வாயில் வெளிப்பட்டு, குஷ்ட நோயைத் தீர்த்தருளியதால்,
இப்பெயர் பெற்றது.
கருடன் பூசித்து, அமுதம் பெற்றுத் தானும், தன் தாயும் சாபம் நீங்கப் பெற்ற தலம்.
இதனால் திருமதிலின் மேல் கருடன் உருவங்கள் உள்ளன.
இதில் ஸ்தானம் செய்ய விரும்பி இது இருக்கும் திசையில் ஓரடி எடுத்து வைத்தாலே கங்கா
ஸ்நானம் செய்த பலனும், சிவலோக வாழ்வும் பெற்றவர்கள் ஆகிறார்கள். சிவராத்திரியில் பக்தியுடன்
இத்தீர்த்தத்தில் மூழ்கினால், பதினாயிரம் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.
அமிர்த துளிகள் சிந்தியதால் ஆலயத்திற்கு எதிரிலுள்ள தீர்த்தம் அமிர்த தீர்த்தம்
ஆயிற்று.
குறிப்பு: படங்கள் அனைத்தும் மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே
அருள்தரும் ஆலயங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக