🌟 விருச்சக ராசியின் அதிபதி செவ்வாய் பகவான் ஆவார். செவ்வாய் பகவானுடன் குரு நட்பு என்ற நிலையில் நின்று புரியும் சுப மற்றும் அசுப பலன்களை காண்போம்.
🌟 சமயோகித சிந்தனைகளை உடையவர்கள்.
🌟 பொறுமையான பேச்சுகளையும், அதே சமயம் அனைவரையும் அனுசரித்து செல்லக்கூடிய குணமும் உடையவர்கள்.
🌟 மற்றவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யக்கூடியவர்கள்.
🌟 மனதில் எவ்விதமான சலனமும், சஞ்சலமும் இல்லாமல் பழகக்கூடியவர்கள்.
🌟 எதிலும் அவசரமின்றி நிதானமாக சிந்தித்து செயல்படக்கூடியவர்கள்.
🌟 தர்ம சிந்தனைகள் கொண்டவர்கள். எடுத்த முடிவுகளில் ஸ்திரமாக இருந்து செயல்படக்கூடியவர்கள்.
🌟 உயர்ந்த கல்வியை கொண்டவர்கள். அல்லது அதற்கு ஈடான அனுபவ அறிவு கொண்டவர்கள்.
🌟 பண விவகாரங்களில் கண்ணும், கருத்துமாக இருக்கக்கூடியவர்கள்.
🌟 கொடுக்கல் - வாங்கலில் நேர்மையானவர்கள்.
🌟 மற்றவர்களை ஏமாற்றும் எண்ணமில்லாதவர்கள். தர்மத்திற்கு கட்டுப்பட்டு வாழக்கூடியவர்கள்.
🌟 வாக்கு வன்மை உடையவர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றும் திறமை உடையவர்கள்.
🌟 மற்றவர்களின் சொத்துக்கள் இவர்களை வந்துச் சேரும். சிறு செயல்களாக இருந்தாலும் அதை நினைவில் வைத்துக் கொள்ளக்கூடியவர்கள்.
🌟 அறுசுவை உணவுகளை ரசித்து உண்ணக்கூடியவர்கள். அதுவும் இனிப்பு சுவை என்றால் அதன் மீது அளவற்ற விருப்பம் உடையவர்கள்.
🌟 பதவியில் கிடைக்கும் அதிகாரங்களை எந்நிலையிலும் தவறாக பயன்படுத்தமாட்டார்கள்.
🌟 பூர்வீக சொத்துகளால் இலாபம் அடையக்கூடியவர்கள். கௌரவத்துடன் கூடிய உயர்ந்த வாழ்க்கையை வாழக்கூடியவர்கள்.
குறிப்பு: படங்கள் அனைத்தும் மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே
ஆன்மிகமும் - ஜோதிடமும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக