கூகுள் பிக்சல் 5 மற்றும் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விலையையும் எந்த பகுதியில் எல்லாம் வெளியாகிக் கிடைக்கும் என்ற விவரங்களை பார்க்கலாம்.
2020 ஆம் ஆண்டின் முதன்மை ஸ்மார்ட்போன்
கூகுள் நிறுவனத்தின் 2020 ஆம் ஆண்டின் முதன்மை ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய பிக்சல் 5, பிக்சல் 4ஏ 5ஜி உடன் வருகிறது. இந்த இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களுமே குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 ஜி எஸ்ஓசி ஆல் இயக்கப்படுகின்றன. அதோடு இதில் டைட்டன் எம் பாதுகாப்பு சிப்-ம் உள்ளது. கூகுள் பிக்சல் 5 மற்றும் பிக்சல் 4ஏ 5ஜி
இரட்டை பின்புற கேமராக்கள்
இரண்டு மாடலுமே இரட்டை பின்புற கேமராக்கள் மற்றும் 8 மெகாபிக்சல் செல்பி கேமராவுடன் வருகிறது. செல்பி கேமராவிற்கு பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளே வடிவமைப்பும் உள்ளது. அதோடு போர்ட்ரெய் லைட் அம்சமும், எக்ஸ்ட்ரீம் பேட்டரி சேவர் பயன்முறையும் இதில் உள்ளது. இதன் பேட்டரி ஆயுள் 48 மணி நேரம் வரை நீடிக்கும். மேலும் பிக்சல் 5 மாடல் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவை கொண்டிருக்கிறது.
கூகுள் பிக்சல் 5, பிக்சல் 4 ஏ 5 ஜி விலை
கூகுள் பிக்சல் 5 விலை தோராயமாக ரூ. 51,400 எனவும் கூகிள் பிக்சல் 4 ஏ 5 ஜி சுமார் ரூ. 37,000 எனவும் தொடங்கும் என தெரிவிக்கப்படுகிறது. இரண்டு ஸ்மார்ட் போன்களும் பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா, தைவான், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய 5 ஜி சந்தைகளுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிக்சல் 4ஏ 5 ஜி அக்டோபர் 15 ஆம் தேதி ஜப்பானில் முதன்முதலில் அறிமுகமாகும் எனவும் நவம்பர் முதல் பிற நாடுகளிலும் வெளிவரத் தொடங்கும் என கூறப்படுகிறது. அதேபோல் பிக்சல் 5 அக்டோபர் 15 முதல் 9 நாடுகளில் வெளிவரும் என கூறப்படுகிறது.
கூகுள் பிக்சல் 5 ஸ்மார்ட்போன்
கூகுள் பிக்சல் 5 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் குறித்து பார்க்கையில், இதில் டூயல் சிம் நானே பள்ஸ் இசிம் ஆதரவு உள்ளது. அதோடு ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ், 6 இன்ச் ஃபுல் ஹெச்டி பள்ஸ் ஓஎல்இடி டிஸ்ப்ளே வசதியும் காரினங் கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு வசதியும் உள்ளது.
ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன்
கூகுள் பிக்சல் 5 ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 ஜி எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. அதோடு இதில் டூயல் ரியர் கேமரா அமைப்பும், 8 மெகாபிக்சல் செல்பி கேமரா ஆதரவும் உள்ளது. 5 ஜி மற்றும் 4ஜி எல்டிஇ ஆதரவோடு கூடிய பாதுகாப்புக்காக பின்புறமாக பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் வசதியும் உள்ளது. 4080 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் இதில் இருக்கிறது.
கூகுள் பிக்சல் 4ஏ 5ஜி ஸ்மார்ட்போன்
கூகுள் பிக்சல் 4ஏ 5ஜி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில் இதுவும் டூயல் சிம் ஆதரவு, ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ், 6.2 இன்ச் முழு ஹெச்டி ஓஎல்இடி டிஸ்ப்ளே, கார்னிங் க்ளாஸ் 3 பாதுகாப்பு அம்சமும் ஆக்டோகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765ஜி எஸ்ஓசி ஆதரவும் இருக்கிறது.
8 எம்பி செல்பி கேமரா
12.2 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 16 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா என இரண்டு பின்புற கேமரா அமைப்பும் முன்புறத்தில் 8 எம்பி செல்பி கேமரா வசதியும் இருக்கிறது. யூஎஸ்பி டைப்சி போர்ட், 3885 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 18 வாட்ஸ் வேக சார்ஜிங் அம்சமும் இதில் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக