இந்தியாவின் பல மாநிலங்களில் இன்றும் அறிவிக்கப்படாத உணவுப் பஞ்சம் நிலவுகிறது. இதனைத் தவிர்க்கும் விதமாக நாட்டில் பொதுவான உணவு வழங்கல் திட்டத்தை உருவாக்க எடுக்கப்பட்ட முயற்சிதான் இந்த ஒரே நாடு ஒரே ரேஷன்.ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் இன்று முதல் தமிழ்நாடு முழுக்க அமலுக்கு வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் இருந்தபடி இந்த திட்டத்தை தொடக்கி வைக்கிறார். இந்நிலையில் இந்த திட்டம் குறித்து முழுமையாக அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
1.
ஒரே நாடு ஒரே ரேஷன்
திட்டம் என்றால் என்ன?
இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் அனைத்தும், ஒரே கட்டுப்பாட்டின்
கீழ் கொண்டு வரப்படும். ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள், இந்தியாவின் எந்த மாநிலத்தில்
உள்ள ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்க முடியும். நீங்களும் எந்த மாநிலத்திலும் உள்ள
ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கலாம். அதேபோல பிற மாநிலத்தவர்களும் உங்கள் பகுதி ரேஷன்
கடைகளில் பொருட்களை வாங்கலாம்.இந்த திட்டம் தான் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ என்று
அழைக்கப்படுகிறது.
2.
திட்டத்தை உருவாக்கியது யார்?
மத்திய நுகர்வோர் நலன் மற்றும் பொதுவினியோக அமைச்சகம் சார்பில் இந்த திட்டம் முன்வைக்கப்பட்டு
தமிழக அரசின் பொது விநியோகத் திட்ட அமைப்பால் கண்காணிக்கப்படுகிறது
3.
எப்படி செயல்படுகிறது இந்த ஒரே ரேஷன் திட்டம்?
ரேஷன் அட்டைகள் ஸ்மார்ட் கார்டுளாக மாற்றப்பட்டுள்ளன. ஒவ்வொரு முறையும் இந்த கார்டைப்
பயன்படுத்தி எங்கு பொருள் வாங்கினாலும் அது மையமாக இருக்கும் ஒரு பொது தரவுத்தளத்தில்
(data base) சேர்க்கப்படும். அதன்படி ஒரு கார்டில் மாதம் ஒருமுறை மட்டுமே வாங்க முடியும்.
அதற்காக அனைத்து ரேஷன் கடைகளும் கணினிமயமாக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் அனைத்து ரேஷன்
கடைகளிலும் கைரேகையைப் பதிவு செய்யும் கருவிகள் பொருத்தப்படும். இதில் உங்கள் கைரேகையைப்
பதிவு செய்து நீங்கள்பொருட்களை வாங்கலாம்.
4.
யார் வேண்டுமானாலும் வாங்கலாமா?
முடியாது. ஸ்மார்ட் கார்டில் பெயர் உள்ள குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே வாங்க முடியும்.
இதற்காக ஆதார் கார்டுகளிலிருந்து கைரேகைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன்மூல, குடும்ப
உறுப்பினரின் கைரேகைதானா என்பதும் ஒப்பிடப்படும்.
5.
தமிழ்நாடு முழுக்க அமல்படுத்தப்படுகிறதா? ?
இல்லை. திருச்சி, பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம், கரூர், திருப்பூர், நெல்லை,
தர்மபுரி, வேலூர், நாமக்கல், நீலகிரி, திருப்பத்தூர், தேனி, திருவள்ளூர், ஈரோடு, காஞ்சீபுரம்,
திருவாரூர், வடசென்னை, தென்சென்னை, செங்கல்பட்டு, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, சேலம்,
தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, கோயம்புத்தூர்,
சிவகங்கை, திண்டுக்கல், கடலூர் ஆகிய 32 மாவட்டங்களில் மட்டுமே இன்று முதல் அமலுக்கு
வருகிறது.விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவண்ணாமலை ஆகிய
6 மாவட்டங்களில் வரும் 15ஆம் தேதிக்குப் பிறகு இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
இதுதொடர்பாக அரசாணையும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
6.
ஒரே நாடு ஒரே ரேஷன்: சிக்கல்கள் என்ன?
பொருட்களின் போதாமை ஏற்படலாம். இதனால், உள்ளூர் பகுதி மக்களுக்கு அதிருப்தி ஏற்பட வாய்ப்புண்டு.
எந்திரக் கோளாறு அடிக்கடி நிகழலாம். அதனைக் காரணம் காட்டி உணவுப் பொருட்கள் வழங்கல்
தடைபடலாம்.இந்தியாவின் பல மாநிலங்களில் இன்றும் அறிவிக்கப்படாத உணவுப் பஞ்சம் நிலவுகிறது.
இதனைத் தவிர்க்கும் விதமாக நாட்டில் பொதுவான உணவு வழங்கல் திட்டத்தை உருவாக்க எடுக்கப்பட்ட
முயற்சிதான் இந்த ஒரே நாடு ஒரே ரேஷன். இதன்மூலம் அரசு கொள்முதல் செய்யும் விளைபொருட்களின்
அளவு அதிகரிக்கும். ஆனால், விவசாயிகளுக்கு முறையான விலை வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக