இந்தியாவில் மற்ற நாடுகளின் ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய ஸ்மார்ட் டிவிகள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக
சியோமி நிறுவனத்தின் அனைத்து டிவி மாடல்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது.
இந்நிலையில் ஸ்மார்ட் டிவிகளை தயாரிக்க பயன்படுத்தப்படும் open cell-களை இறக்குமதி செய்வதற்கான, 5% சுங்க வரியை மீண்டும் விதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. முன்னதாக அளிக்கப்பட்டிருந்த ஓராண்டு விலக்கு செப்டம்பர் 30-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் இன்று முதல் இந்த சுங்க வரி அமலுக்கு வருகின்றது என்பது குறிப்பிபடத்தக்கது.
இப்போதே சில நிறுவனங்கள் தங்களது ஸ்மார்ட் டிவிகளின் விலை அதிகரித்துள்ளன. அதன்படி
பிளிப்கார்ட் மற்றும் அமேசான் போன்ற தளங்களில் முக்கிய நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகளின்
விலை அதிகரித்துள்ளதை பார்க்க முடியும். உதாரணமாக, ஒன்பிளஸ் ஒய் சீரிஸ் 32-இன்ச் ஸ்மார்ட்
டிவியின் விலை ரூ. 12,999 ஆக இருந்தது, இப்போது இதன் விலை ரூ.14,999-ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல் சியோமியின் மி டிவி 4 ஏ ஹாரிசன் பதிப்பு சமீபத்தில் ரூ.13,499 -விலையில் அறிமுகம் செய்யப்பட்டது, தற்சமயம் ரூ.500-வரை உயர்ந்துள்ளது. பின்பு HiSense 32-இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.11,990-ஆக இருந்தது, தற்சமயம் விலை உயர்த்தப்பட்டு ரூ.12,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
குறிப்பாக இந்த வரி அதிகரிப்பானது விழாக்கால தருணத்தில் வந்திருப்பது, விற்பனையை கண்டிப்பாக பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு அரசின் இந்த நடவடிக்கையால் உள்நாட்டு உற்பத்தியினை ஊக்குவிக்க முடியும் என்றாலும் மறுபுறம் பொருட்களின் விலை அதிகரிக்கும் என்பது கவலையளிக்கும் விஷயமாகவே இருக்கிறது.
குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் டிவியின் உற்பத்தியில் முக்கிய உதிரி பாகமாக கருதப்படுவது டிவி பேனல்கள் ஆகும் அத்தகைய உதிரி பாகங்களுக்கு ஓராண்டுக்கு 5சதவிகிதம் வரி சலுகை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நடைமுறை ஆனது கடந்த செப்டம்பர் 30-ம் தேதி முடிவுக்கு வரும் என்றும் அரசாங்கம் கூறியிருந்தது. இதனால் இனி டிவியின் விலை சற்று அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
அதாவது செப்டம்பர் முதல் பேனல் உற்பத்தியாளர்கள் ஏற்கனவே விலையை 20 முதல் 25சதவிகிதம்
அதிகரித்துள்ளதால் பேனல் விலைகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக டிவிகளின் விலையில்
சுமார் 60சதவிகிதம் திரையை உருவாக்கும் ஒபன் செல் பேனல் விலையை பொறுத்து இருக்கும்.
இந்நிலையில் வரி அதிகரிப்பு மேற்கொண்டு விலையின் அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என நிபுணர்கள்
கூறுகின்றனர்.
மேலும் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் ஓபன் செல் பேனல்கள் அதிகளவில் சீனா உள்ளிட்ட
பல நாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. குறிப்பாக சீனாவில் இருந்து
சற்று அதிகமாக இறக்குமதி செய்யப்படுகிறது. எனவே இந்தியாவின் இந்த நடவடிக்கையால் சீனாவுக்கு
சற்று பின்னடைவு ஏற்பட்டாலும், நீண்டகால நோக்கில் பார்க்கும் இந்தியாவின் உள்நாட்டு
உற்பத்தி பெருக நல்ல வாய்ப்பாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக