ஜியோ நிறுவனம் தொடர்ந்து புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்றுதான் கூறவேண்டும், அதன்படி கடந்த மே மாதம் முதல் 200நகரங்களில் செயல்பட்டு வரும் ஜியோமார்ட், தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் பால் மற்றும் பிரெட் டெலிவரி சேவையை அறிமுகம் செய்துள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆன்லைன் மளிகைப் பொருட்கள் சேவையான ஜியோமார்ட், சென்னை மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில், பால், பழங்கள் மற்றும் பிரெட் விநியோகச் சேவையை துங்கியுள்ளது.
எனவே சந்தா அடிப்படையிலான இந்த சேவையை JioMart செயலியில் அணுகலாம். பின்பு பயனாளிகள் சேவையின் துவக்க தேதியை குறிப்பிட்டு, தினமும், ஒரு நாள் விட்டு ஒரு நாள் அல்லது வாராந்திர, மாதந்திர அடிப்படையில் கூட டெலிவரியை தீர்மானத்து கொள்ளலாம்.
குறிப்பாக இந்த நடவடிக்கை மூலம், சந்தா அடிப்படையில் பால், மளிகைப்பொருட்களை வழங்கும், மில்க்பாஸ்கெட், பிக்பாஸ்கெட்டின்
பிபிடெயிலி, ஸ்விக்கியின் சூபர்டெய்லி ஆகிய சேவைகளுடன் ஜியோமார்ட் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பால் பழங்கள், பிரெட் தவிர வாடிக்கையாளர்கள், மலர்கள், இட்லி மாவு போன்றவற்றையும் வாங்கமுடியும் என்று கூறப்படுகிறது. இவற்றுக்கான தொகையை போன்பே, கூகுள்பே, மொபிக்விக், ஜியோமணி மூலம் செலுத்தலாம். இந்த சேவையை வரும் மாதங்களில் அதிக நகரங்களில் அறிமுகம் செய்ய ஜியோமார்ட் திட்டமிட்டுள்ளது.
பின்பு இந்த ஜியோமார்ட் சேவை குறிப்பிட்ட இடத்தில் செயல்படுகிறதா என்பதை அறிய, பின்கோடை சமர்பித்து தகவல் தெரிந்து கொள்ளலாம். மேலும் ஜியோமார்ட்டின் சந்தா பகுதியில் டெலிவரி தகவல்களை பின் தொடரலாம்.
வெளிவந்த தகவலின்படி எம்,ஆர்.பி விலையை விட குறைந்தபட்சம் 5சதவிகிதம் குறைவாக விற்பதாக கூறப்படுகிறது. சில நேரங்களில் 20அல்லது 30சதவீத தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக