Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 9 அக்டோபர், 2020

வைரல் வீடியோ., புதுவித தானியங்கி கதவு: மாஸ்க் அணிந்து வந்தால்தான் திறக்கும்- முழு ஸ்கேனிங்!

புதுவிதமான தொழில்நுட்ப முறை

தாய்லாந்து நாட்டில் கொரோனா பரவலை தடுக்க புதுவித தொழில்நுட்ப முறையான ஸ்கேனர் கருவிகளோடு கூடிய தானியங்கி கதவு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கதவானது மாஸ்க் அணிந்து உள்ளே வருபவர்களுக்கு மட்டுமே திறக்கப்படும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல்

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகின்றன. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்று முகக்கவசம், கையுறை அணிதல். அதோடு கொரோனா பரவலுக்கு ஏற்ப ஊரடங்கானது தளர்வுகளோடு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

வாழ்வாதாரத்தை இழந்த மக்கள்

கொரோனா ஊரடங்கால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து பலரும் தவித்து வருகின்றனர். உச்சத்தில் இருந்தவர் திடீரென வேலை இழந்து கடனாளியாக மாறும் நிகழ்வு இந்த கொரோனா காலங்களில் அரங்கேறியுள்ளது.

கொரோனா முடிவை எதிர்நோக்கி

கொரோனா தொற்று எப்போது முடிவுக்கு வரும் நிலைமை எப்போது சீராக மாறும் என பல்வேறு கேள்விகள் பொதுமக்களிடையே எழுந்து வருகிறது. கொரோனாவுக்கு முன், பின் என காலங்கள் இரண்டாக பிரிக்கப்படும் அளவிற்கு காலங்கள் மாறியுள்ளது.

அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும்

கொரோனாவை கட்டுபடுத்த அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளி கடைபிடிப்பது கட்டாயம் போன்ற விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது. அனைத்து இடங்களிலும் பொதுமக்கள் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா தலமாக விளங்கி வரும் தாய்லாந்து

சுற்றுலா தலமாக விளங்கி வரும் தாய்லாந்து கொரோனா வைரஸ் காரணமாக பெரும் பொருளாதார சிக்கலை சந்தித்து வருகிறது. சுற்றுலா பயணிகளின் வருகையை மையமாக வைத்தே அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி இருக்கிறது.

புதுவிதமான தொழில்நுட்ப முறை

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 7 மாதங்களாக வெளிநாட்டு பயணிகளை அனுமதிக்கவில்லை. இருப்பினும் தாய்லாந்து அரசு தற்போது குறிப்பிட்டளவிலான சுற்றுலா பயணிகள் தங்களது நாட்டிற்குள் அனுமதிக்க உள்ளது. கொரோனா பரவலை தடுப்பதற்கு புதுவிதமான தொழில்நுட்ப முறைகளை கையாளும் முறை பின்பற்றி வருகின்றனர்.

பிரபல கடைகளில் தானியங்கி கதவுகள்

தாய்லாந்து நாட்டில் பெரும்பாலான சிறிய மற்றும் பிரபல கடைகள் பலவற்றில் தானியங்கி கதவுகளும், ஸ்கேனர்களும் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தானியங்கி கதவுகள் அனைத்தும் கடைக்குள் வரும் நபர்களை முழுவதுமாக ஸ்கேன் செய்து அவர்கள் மாஸ்க் அணிந்துள்ளார்களா போன்ற அனைத்தும் உறுதி படுத்திய பிறகே கதவு திறக்கும்.

மாஸ்க் அணியாதவற்கு தானியங்கி கதவுகள் திறக்காது

கடைக்குள் வரும் நபர்கள் மாஸ்க் அணியாமல் இருந்தால் தானியங்கி கதவு திறக்கப்படாது என தெரிவிக்கப்படுகிறது. தாய்லாந்து நாட்டில் பின்பற்றப்படும் புதுவித தொழில்நுட்ப தானியங்கி கதவு குறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக