Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 9 அக்டோபர், 2020

Soori சூரி கொடுத்த ரூ. 2.70 கோடி மோசடி புகார்: விஷ்ணு விஷால் விளக்கம்

வீர தீர சூரன் படத்தின் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மற்றும் ரமேஷ் ஆகியோர் நிலம் வாங்கித் தருவதாகக் கூறி தன்னிடம் ரூ. 2.70 கோடி மோசடி செய்ததாக சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து சூரி அண்மையில் புகார் அளித்தார்.

இந்நிலையில் அன்புவேல் ராஜன் மற்றும் ரமேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ரமேஷ் என்பவர் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ஆவார். வீர தீர சூரன் படத்தில் நடித்ததற்காக தனக்கு ரூ. 40 லட்சம் சம்பள பாக்கி இருந்தது என்றும், அதை திருப்பிக் கேட்ட போது நிலம் வாங்கித் தருவதாக கூடுதல் பணம் பெற்று ஏமாற்றியதாகவும் சூரி புகார் தெரிவித்திருக்கிறார்.

சூரியின் புகார் பற்றி விஷ்ணு விஷால் சமூக வலைதளத்தில் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து விஷ்ணு விஷால் கூறியிருப்பதாவது,
என் மீதும், என் தந்தை மீதும் வைக்கப்பட்டிருக்கும் பொய்யான குற்றச்சாட்டுகளைப் பற்றிப் படித்தது மிகுந்த அதிர்ச்சிகரமாகவும், வருத்தமாகவும் இருந்தது. சிலர் உள்நோக்கத்துடன் செயல்படுவது கண்கூடாகத் தெரிகிறது. உண்மையில் திரு. சூரி, விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸுக்கு ஒரு அட்வான்ஸ் பணத்தைத் திரும்பத் தர வேண்டும். கவரிமான் பரம்பரை என்ற படத்துக்காக 2017ம் ஆண்டு கொடுக்கப்பட்ட பணம் அது. சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டது. சட்டத்தின் மீதும் நீதித் துறையின் மீதும் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. இந்த நேரத்தில் இது பற்றி இன்னும் விரிவாகப் பேசுவது சரியாக இருக்காது. நாங்கள் சட்டம் அனுமதிக்கும் பாதையில் செல்வோம்.

உண்மை வரும்வரை ரசிகர்களும், நல விரும்பிகளும் காத்திருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். மேலும் உண்மையான தகவல்களுடன் இது பற்றி செய்தி வெளியிட வேண்டும் என்று ஊடகங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். எல்லாம் தெளிவான பிறகு சட்டப்படி சரியான நடவடிக்கையை நான் எடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக