Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 9 அக்டோபர், 2020

Samsung கேலக்ஸி F41 இந்தியாவில் கலக்கலாக அறிமுகம்.! விலை என்ன தெரியுமா?

சாம்சங் கேலக்ஸி F41 ஸ்மார்ட்போன்

சாம்சங் நிறுவனம் இந்தியாவில் நேற்று மாலை Samsung கேலக்ஸி F41 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் நேற்று யூடியூப் சேனல் வழியாக நேரலை செய்யப்பட்டது. டிஜிட்டல் நிகழ்ச்சியின் மூலம் சாம்சங் கேலக்ஸி F41 அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய Samsung ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்ச விபரங்களைப் பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி F41 ஸ்மார்ட்போன்

சாம்சங் கேலக்ஸி F41 ஸ்மார்ட்போன் என்பது சாம்சங்கின் புதிய கேலக்ஸி F சீரிஸ் பிரிவில் வெளியாகும் முதல் ஸ்மார்ட்போன் மாடலாகும். இந்த புதிய ஸ்மார்ட் போன் சிங்கிள் டேக் அம்சம் கொண்ட 64 மெகாபிக்சல் கேமராவுடன், வாட்டர் டிராப் நாட்ச் கொண்ட சூப்பர் அமோலேட் டிஸ்பிளே மற்றும் 6000 எம்ஏஎச் பேட்டரி போன்ற அட்டகாச அம்சத்துடன் வருகிறது.


Samsung கேலக்ஸி F41 விவரக்குறிப்புகள்

  • 6.4' இன்ச் FHD பிளஸ் சூப்பர் அமோலேட் இன்பினிட்டி U டிஸ்பிளே
  • எக்ஸினோஸ் 9611 ஆக்டா-கோர் SoC
  • 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி / 128 ஜிபி சேமிப்பு
  • பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 512 ஜிபி வரை சேமிப்பு
  • ஆண்ட்ராய்டு 10

கேமரா அமைப்பு

  • டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு
  • 64 மெகாபிக்சல் கேமரா
  • 8 மெகாபிக்சல் 123 ° வைடு ஆங்கிள் கேமரா
  • 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார்
  • 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா

இணைப்பு விருப்பங்கள்

  • டூயல் 4G VoLTE
  • வைஃபை 802.11 ac (2.4GHz + 5GHz)
  • புளூடூத் 5
  • ஜிபிஎஸ் + GLONASS
  • USB டைப்-C
  • 15W சார்ஜிங் ஆதரவு
  • 6000 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி F41 விலை

சாம்சங் கேலக்ஸி F41 போனின், 6 ஜிபி + 64 ஜிபி வேரியண்ட் ரூ .16,999 ஆகவும், 6 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டிற்கு ரூ .17,999 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விற்பனை தேதி

சாம்சங் கேலக்ஸி F41ஸ்மார்ட்போன் ஃப்யூஷன் கிரீன், ஃப்யூஷன் பிளாக் மற்றும் ஃப்யூஷன் ப்ளூ கலர் விருப்பங்களில் வருகிறது. அக்டோபர் 16ம் தேதி முதல் பிளிப்கார்ட்டில் நடக்கும் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் ரூ .15,499 என்ற சலுகை விலையில் சாம்சங் கேலக்ஸி F41 கிடைக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக