Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 7 அக்டோபர், 2020

பெண்ணுறுப்பில் ஏற்படும் ஈஸ்ட் தொற்றை பேக்கிங் சோடா வைத்து எப்படி சரிசெய்யலாம்?

 பேக்கிங் சோடா பயன்கள் | Baking soda benefits in Tamil

பெண்ணுறுப்பில் ஏற்படும் ஈஸ்ட் தொற்றை சமாளிக்க சில எளிமையான விஷயங்களைக் கொண்டே சரி செய்ய முடியும் என்கிறார் மகப்பேறு மருத்துவர். அது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்

எளிமையான முறைகளை ஒவ்வொரு பெண்ணும் பின்பற்றுவது பெண்ணுறுப்பு ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கும். பெண்ணுறுப்பில் ஏற்படும் ஈஸ்ட் தொற்றுநோய் என்பது எரிச்சலை ஏற்படுத்தக் கூடியது. இதனால் பெண்ணுறுப்பு நோய் தொற்றுக்கு உள்ளாக வாய்ப்பு உள்ளது. இதை அப்படியே விட்டால் காலப்போக்கில் இனப்பெருக்க உறுப்பில் பாதிப்பு உண்டாக வாய்ப்புள்ளது. அப்படி எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது வீட்டிலுள்ள பொருளு்களை வைத்தே எப்படி பெண்ணுறுப்பில் உண்டாகும் ஈஸ்ட் தொற்றை சரிசெய்யலாம் என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

காரணங்கள்

 

தூக்கமின்மை, மன அழுத்தம், பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு, நீரிழிவு நோய், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களால் உங்களுக்கு ஈஸ்ட் தொற்று என்பது ஏற்படலாம்.

இந்த ஈஸ்ட் தொற்று பொதுவாக வெள்ளை வெளியேற்றம், சிவத்தல், வலி, புண், எரியும் உணர்வு மற்றும் வீக்கத்துடன் நமைச்சல் உணர்வுடன் இருக்கும்.

மருத்துவரை அணுகி நீங்களே சிகிச்சை பெறுவது சிறந்தது என்றாலும், வலியைப் போக்க நீங்கள் வீட்டிலேயே சில எளிமையான விஷயங்களை செய்ய முடியும்.

இது குறித்து மகப்பேறு மருத்துவர் பெண்களுக்கு சில ஐடியாக்களை கூறுகிறார்.

பேக்கிங் சோடாவை கொண்டு கழுவுங்கள்

 

உங்க பெண்ணுறுப்பின் pH அளவை சமநிலைப்படுத்த பேக்கிங் சோடா உதவுகிறது. இதன் அமில தன்மை பிறப்புறுப்பு ஈஸ்ட் தொற்றுக்கு வழிவகுக்கும் கேண்டிடா செல்களைக் கொல்ல உதவுகிறது. இதனால் உங்களால் ஈஸ்ட் தொற்றை தடுக்க முடியும்.

பயன்படுத்தும் முறை

2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை குளிக்கின்ற தண்ணீரில் கலந்து கொள்ளுங்கள். நன்றாக கலந்து அதை கரையும் படி செய்து கொள்ளுங்கள். 10-15 நிமிடங்கள் பாத் டாப்பில் இருங்கள். உங்க பெண்ணுறுப்பை அந்த தண்ணீர் நனைக்க வேண்டும்.

குளிர்ந்த நீர் ஒத்தடம்

 

ஈஸ்ட் நோய்த்தொற்றின் போது புண், அரிப்பு மற்றும் எரியும் உணர்வுகளைச் சமாளிக்க உங்க பெண்ணுறுப்பில் ஒரு துணியில் ஐஸ் கட்டிகளைக் கட்டிக் கொண்டு வைக்கவும். இது உங்களுக்கு இதமாக இருக்க உதவி செய்யும்.

தண்ணீர் கொண்டு அடிக்கடி கழுவாதீர்கள்

 

பெண்ணுறுப்பை தண்ணீர் கொண்டோ அல்லது நறுமண க்ரீம் கொண்டு கழுவுவது உங்க பெண்ணுப்பில் உள்ள நல்ல பாக்டீரியாக்களையும் நீக்குகிறது. இதனால் வெளியே உள்ள கிருமிகள் எளிதாக உள்ளே நுழைய முடியும். எனவே ஈஸ்ட நோய்த் தொற்றை லிருந்து உங்க பெண்ணுறுப்பை காக்க நல்ல பாக்டீரியாக்களை காப்பது அவசியம். எனவே அடிக்கடி

பெண்ணுறுப்பை தண்ணீர் கொண்டு கழுவாதீர்கள்.

செயற்கையான வாசனை சோப்புகள் மற்றும் தயாரிப்புகளை தவிர்க்கவும். பெண்கள் தங்கள் சுகாதாரத்தை காக்க குளியல் சோப்புகளை பயன்படுத்துவது அவசியம். ஆனால் அதையே உங்க பெண்ணுறுப்பில் பயன்படுத்தும் போது அது pH சமநிலையை பாதிக்கிறது. எனவே இந்த மாதிரி நறுமண சோப்புகளை பயன்படுத்துவதை தவிருங்கள். பெண்ணுறுப்பை சுத்தமாக வைக்க தண்ணீரை பயன்படுத்துங்கள். அதையுமே அடிக்கடி பயன்படுத்த கூடாது.

காற்றோட்டமான உள்ளாடைகளை அணியுங்கள்

 

உங்கள் உள்ளாடைகளைத் தேர்ந்தெடுக்கும் போது, செயற்கைத் துணிகளைத் தள்ளிவிட்டு, பருத்தி போன்ற சுவாசிக்கக்கூடிய துணிகளை எப்போதும் தேர்வு செய்யுங்கள். இது வியர்வை மற்றும் ஈரத்தை உறிஞ்சி உங்க பெண்ணுறுப்பில் ஈஸ்ட் தொற்று ஏற்படாமல் காக்கும்.

மேற்கண்ட முறைகள் உங்கஉங்க பெண்ணுறுப்பை ஆரோக்கியமாக வைக்க உதவி செய்யும்.

,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக