இந்தியாவிற்கு சீனாவுக்கு இடையேயான எல்லை பிரச்சைனைக்கு மத்தியில் பப்ஜி விளையாட்டு தடைசெய்யப்பட்டது. இதை மீண்டும் நாட்டிற்குள் கொண்டு வருவதற்கு பப்ஜி நிறுவனம் ஏர்டெல்லுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பொதுமக்கள் வீட்டிலேயே தங்கும் நிலை
கொரோனா தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும் தொடர்ந்து தளர்வுகளோடு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் வீட்டிலேயே தங்கும் நிலை ஏற்பட்டது. இதில் பெரும்பாலானோர் தங்களது நேரத்தை டிவியிலும், மொபைல்போனிலும் செலவிட்டனர்.
பிரதானமாக இருந்த பப்ஜி விளையாட்டு
ஸ்மார்ட்போன்களில் PUBG விளையாட்டு பிரதானமாக இருந்துள்ளது. பப்ஜி விளையாடுவதில் ஏணையோர் தங்களது நேரத்தை செலவிட்டனர். வீட்டுக்குள் அமர்ந்துக் கொண்டோ அல்லது நண்பர்களோடு அமர்ந்து கொண்டோ திடீரென ஒருவர் அவனை சுடு மெடிகிட் கொண்டுவா அப்படி இப்படி என காதில் ஹெட்போன் மாட்டிக் கொண்டு கத்தும் நிகழ்வையும் நாம் பார்த்திருப்போம்.
தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை
பப்ஜி விளையாட்டில் பலரும் தங்களை அடிமைப்படுத்தி கொண்டார்கள். இதையடுத்து அந்த விளையாட்டு தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பினராலும் முன் வைக்கப்பட்டது. இதில் நேரத்தை செலவிட்டு வந்த சிலர் மாரடைப்பு ஏற்பட்டு உயரிழந்த சம்பவங்களும் அரங்கேறியுள்ளது.
தடை விதித்து மத்திய அரசு உத்தரவு
பப்ஜியை தடை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் குறிப்பாக பெற்றோர்கள் கோரிக்கைகளை முன்னிருத்தி வந்தனர். இந்த நிலையில்தான், பப்ஜி விளையாட்டுக்கு இந்தியாவில் தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. பப்ஜி தடையால் ஏணையோர் மன உளைச்சலுக்கு ஆளாகினர். இதில் ஒருவர் பப்ஜி தடை செய்யப்பட்டதன் காரணமாக தூக்கிட்டு தற்கொலையே செய்து கொண்டார்.
PUBG கார்ப்பரேஷன்
தடை செய்யப்பட்டதிலிருந்து, இந்தியாவில் கேமிற்கான விநியோக உரிமையை டென்செண்டிலிருந்து புதுப்பித்துள்ளதாக PUBG கார்ப்பரேஷன் கூறியுள்ளது, அதாவது PUBG நிறுவனம் இப்போது நமது நாட்டில் தனது சொந்த நிறுவனத்தை நிறுவ முன்னிறுத்தியுள்ளது. சமீபத்தில் டென்சென்ட், "பிளேயர் தரவின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நிறுவனத்திற்கு முன்னுரிமை அளிப்பதால் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளை நாங்கள் மதிக்கிறோம்." என்று கூறியுள்ளது.
பப்ஜி ஜியோவுடன் பேச்சு வார்த்தை
PUBG கார்ப்பரேஷன் நாட்டிலுள்ள அனைத்து வெளியீட்டு பொறுப்புகளையும் ஏற்கும். நிறுவனம் எதிர்காலத்தில் இந்தியாவுக்கு தனது சொந்த PUBG அனுபவத்தை வழங்குவதற்கான வழிகளை ஆராய்கிறது. இதன் ஒருபகுதியாக பப்ஜி ஜியோவுடன் பேச்சு வார்த்தை நடத்தியதாக தகவல் வெளியானது.
முடிவும் எட்டப்படாத நிலை
ஜியோ பப்ஜி பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாத நிலை நீடிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோ பப்ஜி வெளியீட்டு உரிமையை பெறும் என சில தகவல்கள் உறுதிப்படுத்தினாலும் பப்ஜி மீதான தடையை அரசு நீக்க இப்போதைக்கு வாய்ப்பில்லை என்றே தகவல்கள் கூறுகிறது.
பதிவிறக்கங்களில் 26 சதவீதம் வீழ்ச்சி
பப்ஜிக்கு தற்போது உலகளாவிய பதிவிறக்கங்களில் 26 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இதயைடுத்து இந்தியாவில் பப்ஜி மொபைலின் விநியோக உரிமைகளுக்காக பாரதி ஏர்டெல்லுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பப்ஜி ஏர்டெல்லுடன் பேச்சுவார்த்தை
என்ட்டிராகர் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி பப்ஜி ஏர்டெல்லுடன் இணைந்து விளையாட்டின் வெளியீட்டு உரிமைகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த பேச்சுவார்த்தை ஆரம்பக்கட்டத்தில் இருக்கிறது எனவும் கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக