ஏர்டெல்,வோடபோன் நிறுவனங்களுக்கு போட்டியாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தொடர்ந்து சிறப்பான திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். அதன்படி ஜியோ நிறுவனம் அன்மையில் அதன் புதிய போஸ்ட் பிளஸ் சேவையை அறிவித்தது.
குறிப்பாக ரூ.399 முதல் தொடங்கி ரூ.1,499 வரை நீளும் ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டங்கள் ஆனது அதன் சந்தாதாரர்களுக்கு வரம்பற்ற பேச்சு நேர நன்மைகள், டேட்டா ரோல் ஓவர் வசதி மற்றும் பேமிலி ஆட்-ஆன் சிம் வசதி போன்ற நன்மைகளை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும் புதிய போஸ்ட்பெய்ட பிளஸ் சேவையை அணுகுவதற்கான செக்யூரிட்டி டெபாசிட் குறித்த விவரங்கள் தெளிவற்றதாக இருந்த நிலையில், தற்போது இந்த திட்டங்களை தேர்வு செய்யும் பயனர்கள் பாதுகாப்பு வைப்புத்தொகை செலுத்த வேண்டியிருக்கும் என டிராய்(TRAI) இணையதளம் வழியாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
வெளிவந்த அறைக்கையின்படி பேஸிக் ரூ.399ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ் மாதாந்திர திட்ட சந்தாதாரர்கள் ரூ.500 என்கிற பாதுகாப்பு வைப்புத்தொகையை செலுத்த வேண்டும். பின்பு ஜியோ ரூ.599போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டத்திற்கு ரூ.750 என்கிற பாதுகாப்பு வைப்புத்தொகையை செலுத்த வேண்டும். அடுத்து ஜியோவின் ரூ.750 போஸ்ட்பெய்ட் திட்டத்திற்கு ரூ.1000 என்கிற பாதுகாப்பு வைப்புத்தொகையை செலுத்த வேண்டும். பின்னர் ஜியோ ரூ.999போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டத்திற்கு ரூ.1,200 என்கிற பாதுகாப்பு வைப்புத்தொகையை செலுத்த வேண்டும். கடைசியாக ரூ.1499 போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டத்திற்கு ரூ.1800 என்கிற பாதுகாப்பு வைப்புத்தொகையை செலுத்த வேண்டும்.
ஜியோ ரூ.399 போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டத்தின் நன்மைகள்
ஜியோவின் முதல் திட்டமான ரூ.399 ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டத்தின்கீழ், வாடிக்கையாளர்களுக்கு75ஜிபி அளவிலான மாதாந்திர டேட்டா, வரம்பற்ற மற்றும் எஸ்எம்எஸ்,ஒவ்வொரு பில்லிங் சுழற்சிக்கும் 200ஜிபி வரை டேட்டா ரோல்ஓவர் விருப்பம் போன்ற நன்மைகளை வழங்குகிறது. பின்பு இதனுடன் நெட்பிலிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோவின் சொந்த பயன்பாடுகளான ioTV, JioCinema மற்றும் பலவற்றின் OTT சந்தாக்களுடன் வருகின்றன இந்த திட்டம்.
ஜியோ ரூ.599 போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டத்தின் நன்மைகள்
இரண்டாவது திட்டமாக ரூ.599 போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டம் உள்ளது. இதில் பயனர்களுக்கு 100ஜிபி அளவிலான மாதாந்திர டேட்டா,வரம்பற்ற குரல் மற்றும் எஸ்எம்எஸ், ஒவ்வொரு பில்லிங் சுழற்சிக்கும் 200ஜிபி வரை டேட்டா ரோல்ஓவர் விருப்பம்இ பேமிலி திட்டத்தின் கீழ் கூடுதலாக ஒரு சிம் கார்ட் போன்ற நன்மைகள் கிடைக்கும். பின்பு இதனுடன் நெட்பிலிக்ஸ்,அமேசான் பிரைம், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோவின் சொந்த பயன்பாடுகளான JioTV, JioCinema மற்றும் பலவற்றின் OTT சந்தாக்களுடன் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஜியோ ரூ.799 போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டத்தின் நன்மைகள்
மூன்றாவது திட்டமான ரூ.799 போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டம் உள்ளது, இதில் பயனர்களுக்கு 150ஜிபி அளவிலான மாதாந்திர டேட்டா, வரம்பற்ற குரல் மற்றம் எஸ்எம்எஸ், ஒவ்வொரு பில்லிங் சுழற்சிக்கும் 2500ஜிபி வரை டேட்டா ரோல்ஓவர் விருப்பம், பேமிலி திட்டத்தின் கீழ் கூடுதலாக இரண்டு சிம் கார்ட் போன்ற நன்மைகள் கிடைக்கும். மேலும் நெட்பிலிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி + ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோவின் சொந்த பயன்பாடுகளான JioTV, JioCinema மற்றும் பலவற்றின் OTT சந்தாக்களுடன் வருகின்றன இந்த திட்டம்.
ஜியோ ரூ.999 போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டத்தின் நன்மைகள்
நான்காவது திட்டமாக ரூ.999 ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டம் உள்ளது, இதில் பயனர்களுக்கு 200ஜிபி அளவிலான மாதாந்திர டேட்டா, வரம்பற்ற குரல் மற்றும் எஸ்எம்எஸ், ஒவ்வொரு பில்லிங் திட்டத்தின் கீழ் 500ஜிபி வரை டேட்டா ரோல் ஓவர் விருப்பம், பேமிலி திட்டத்தின் கீழ் கூடுதலாக மூன்று சிம் கார்ட் போன்ற நன்மைகள் கிடைக்கும். இந்த திட்டத்திலும் நெட்பிலிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி + ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோவின் சொந்த பயன்பாடுகளான JioTV, JioCinema மற்றும் பலவற்றின் OTT சந்தா கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோ ரூ.1499 போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டத்தின் நன்மைகள்
கடைசி திட்மாமக ரூ.1499ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டம் உள்ளது. இந்த திட்டத்தில் பயனர்களுக்கு 300ஜிபி அளவிலான மாதாந்திர டேட்டா, ஒவ்வொரு பில்லிங் சூழற்சியிலும் 500ஜிபி வரை ரோல்ஓவர் வசதி, இந்தியாவில் இருக்கும் எந்தவொரு நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற குரல் அழைப்புகள், அமெரிக்கா மற்றும் யுஏஇ நாடுகளில் வரம்பற்ற டேட்டா மற்றும் வாய்ஸ் போன்ற நன்மைகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ் இணைப்பு தேவைப்பட்டால், அதை வழங்க ஜியோ ஒரு அமைப்பை கொண்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ அல்லது பிற நெட்வொர்க்குகள் பயனர்கள் தங்க வாட்ஸ்அப்பில் இருந்து 8850188501-க்கு ஹெச்ஐ (HI) என்ற செய்தியை அனுப்பலாம். மேலும் நிறுவனம் புதிய சிம் கார்டை உங்கள் வீட்டுக்கே டெலிவரி செய்கிறது.
ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ் இணைப்பை விரும்பும் ப்ரீபெய்ட் பயனர்கள் மேலே குறிப்பிட்டுள்ள குறுஞ்செய்தி மூலம் சிம் கார்டையும் பெறலாம் அல்லது 1800 88998899 என்ற எண்ணுக்கு அழைக்கலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக