துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன் ஆவார். சுக்கிரனுடன் சமம் என்ற நிலையில் நின்று செவ்வாய் தரும் சுப மற்றும் அசுப பலன்கள் பின்வருமாறு :
எந்த செயல் செய்தாலும் அதை நன்கு சிந்தித்து செயல்படுத்தக்கூடியவர்கள்.
குடும்பத்தின் மீது பற்று உள்ளவர்கள். அதிகாரம் மிகுந்த பேச்சுக்களை உடையவர்கள்.
கொடுத்த வாக்கை எந்நிலையானாலும் காப்பாற்றக்கூடியவர்கள்.
கோபத்தில் வார்த்தைகளை கட்டுப்படுத்த முடியாதவர்கள்.
எதையும் உடனுக்குடன் முடிக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள்.
காலதாமதத்தை விரும்பாதவர்கள்.
எதிலும் எங்கும் எச்சரிக்கையுடன் செயல்படக்கூடியவர்கள்.
நம்பிக்கை உரியவர்கள். ரகசியங்களை காக்கக்கூடியவர்கள்.
சூதுவாது அறியாதவர்கள். பேச்சுக்கலையில் வல்லவர்கள்.
வாதாடுவதில் இவர்களை வெற்றி கொள்வது என்பது சாதாரண காரியமன்று.
உணவை சுவைப்பதில் வல்லவர்கள். அது அசைவமாக இருந்தாலும் சரி சைவமாக இருந்தாலும் சரி.
மனைவிக்கு அடங்கி நடக்கக்கூடியவர்கள்.
உஷ்ணமான உடல் சரீரத்தை உடையவர்கள்.
எதிர்பாலின மக்களுக்காக செலவு செய்யக்கூடியவர்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக