----------------------------------------------------------
கலக்கலான காமெடிகள்...!!
----------------------------------------------------------
சீனு : கல்யாண வீட்டுல என் கண் எதிரிலேயே செருப்பு திருடுப் போயிருச்சு...
தீபக் : ஐயோ... செருப்பு உன்னோடதா?
சீனு : இல்லை... நான் எடுத்துக்கிட்டு போலான்னு பாத்து வெச்சிருந்த செருப்பு...
தீபக் : 😳😳
----------------------------------------------------------
படித்ததில் பிடித்தது...!!
----------------------------------------------------------
சுற்றி இருப்பவர்கள் சொல்வதை எல்லாம்
கேட்டுக்கொள்...
கற்றுக்கொள்...
தீர்மானிப்பது உன் சுயமாக இருக்கட்டும்...
நேரம் இருக்கும்போதே நீ செய்ய வேண்டியதை செய்துவிடு...
எந்த நேரமும் நீ இல்லாமல் போகலாம்...
கடவுள் உங்களுக்கென்று கொடுக்க நினைக்கும்
எதையும், யாராலும் தடுக்க முடியாது...
உன் மனம் ஒன்றே உன்னை வீழ்த்தக்கூடிய ஒரே ஆயுதம்...
அது தெளிவாக இருக்கும் வரையில் நீ ஒருவராலும் வீழ்த்தப்படுவது இல்லை...
----------------------------------------------------------
ஹா... ஹா... இது உண்மைதானே...!!
----------------------------------------------------------
டீ-ல சர்க்கரைய போட்டாலும்,
சர்க்கரையில டீ-யை ஊத்தினாலும்
கரைய போறது என்னமோ சர்க்கரைதான்...
அதே மாதிரி தான் வாழ்க்கையை நினைச்சு வருத்தப்பட்டாலும்,
வருத்தப்பட்டுக்கிட்டே வாழ்ந்தாலும்,
வீணா போறது என்னமோ நம்ம வாழ்க்கைதான்...
----------------------------------------------------------
புது புது விஷயங்கள் உருவாக காரணம் என்ன?
----------------------------------------------------------
இந்த உலகத்துல உன்னால முடியும்,
நீ நல்லா வருவ,
நீ பெருசா சாதிக்க போற...
தைரியமா இரு...
என்கிற நம்பிக்கையான வார்த்தைகளை சொல்வதற்குத்தான் நிறையபேர் இல்லை...
நம்பிக்கையான வார்த்தைகள்தான் புது புது விஷயங்கள் உருவாக காரணமாக இருந்திருக்கின்றன...
----------------------------------------------------------
விடுகதைகள்...!!
----------------------------------------------------------
1. அடித்தால் வலிக்கும், கடித்தால் இனிக்கும். அது என்ன?
விடை : கரும்பு.
2. பாறைமேல் இட்டவிதை, பார்ப்பவர் வியக்க முளைத்த விதை. அது என்ன?
விடை : பல்.
3. நீரிலே கொண்டாட்டம், நிலத்திலே திண்டாட்டம். அது என்ன?
விடை : மீன்.
4. நிலத்திலே முளைக்காத செடி, நிமிர்ந்து நிற்காத செடி. அது என்ன?
விடை : தலைமுடி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக