Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 12 அக்டோபர், 2020

இப்படி எண்ணி வாழுங்கள்... வாழ்க்கை அழகாகும்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-----------------------------------------------

சிரிக்க சிரிக்க சிரிப்பு...!!

-----------------------------------------------

 

நோயாளி : என் பொண்டாட்டி தொல்லை தாங்க முடியல. ஏதாவது ட்ரீட்மெண்ட் பண்ண முடியுமா டாக்டர்?

டாக்டர் : அது தெரிஞ்சா நான் ஏன் 24 மணிநேரமும் ஹாஸ்பிட்டல் வெச்சுருக்கேன்?

நோயாளி : 😂😂

-----------------------------------------------

சிறந்த வரிகள்...!

-----------------------------------------------

விழுந்தால் அழாதே...

எழுந்திரு...!!

 

தோற்றால் புலம்பாதே...

போராடு...!!

 

கிண்டலடித்தால் கலங்காதே...

மன்னித்துவிடு...!!

 

தள்ளினால் தளராதே...

துள்ளியெழு...!!

 

நஷ்டப்பட்டால் நடுங்காதே...

நிதானமாய் யோசி...!!

 

ஏமார்ந்துவிட்டால் ஏங்காதே...

எதிர்த்து நில்...!!

 

நோய் வந்தால் நொந்துபோகாதே...

நம்பிக்கை வை...!!

 

கஷ்டப்படுத்தினால் கதறாதே...

கலங்காமலிரு...!!

 

உதாசீனப்படுத்தினால் உளறாதே...

உயர்ந்து காட்டு...!!

 

கிடைக்காவிட்டால் குதிக்காதே...

அடைந்து காட்டு...!!

வாழ்க்கை எப்பொழுது அழகாகும்?

இந்த நொடி திரும்ப வராது 

என்பதை உணர்ந்து வாழ்ந்தால் 

வாழ்க்கை அழகாகும்...

-----------------------------------------------

வெற்றி நிச்சயம்...!!

-----------------------------------------------

என்ன வாழ்க்கைடா இது? என்று நினைப்பதைவிட,

இந்த வாழ்க்கைக்கு என்னடா குறை? என்று எண்ணி வாழுங்கள்...

வெற்றி நிச்சயம்...!!

-----------------------------------------------

பணம்...!!

-----------------------------------------------

👉 பணம் இல்லாதபோது ஹோட்டல்ல வேலை செஞ்சாலும், 

வீட்டுல வந்து சாப்பிடுகிறான்...

 

👉 பணம் இருக்கும்போது வீட்டுல சமைத்தாலும், 

ஹோட்டல்ல வந்து சாப்பிடுகிறான்...

 

👉 பணம் இல்லாதபோது வயிற்றை நிரப்ப 

சைக்கிள்ல போறான்...

 

👉 பணம் இருக்கும்போது வயிற்றை குறைக்க 

சைக்கிள்ல போறான்...

 

👉 பணம் இல்லாதபோது சோற்றுக்காக அலைகிறான்...

 

👉 பணம் இருக்கும்போது சொத்துக்காக அலைகிறான்...

 

👉 நிம்மதியாக இருக்கும்போது பணத்தை தேடுகிறான்...

 

👉 பணம் இருக்கும்போது நிம்மதியை தேடுகிறான்...



இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக