Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 5 அக்டோபர், 2020

ஹா... ஹா... இது எப்படி இருக்கு?... குட்டிக்கதை... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

----------------------------------------------------

இது சிரிக்க மட்டுமே...!!

----------------------------------------------------

 ஆசிரியர் வகுப்பில் பாடம் எடுத்துக்கொண்டு இருந்தார். 

சில பிராணிகள் மனிதர்களுக்கு உதவியாக இருக்கும்... சில பிராணிகள் மனிதர்களுக்கு உதவி செய்யாமல் இருக்கும்... உதவி செய்கின்ற பிராணிகளை வீட்டில் வளர்க்கிறோம்.. என்று சொல்லி... 

பசு என்ன தரும்? என்று கேட்டார்... 

மாணவர்கள் அனைவரும் ஒன்றாக பால் தரும் என்றனர்.

கோழி என்ன தரும்?

முட்டை...

ஆடு என்ன தரும்?

கம்பளி...

ம்ம்ம்ம்... இதனால தான் பசு, கோழி, ஆடு இதையெல்லாம் வீட்டில் வளர்க்கிறோம்... என்று நிறுத்தி, 

குரங்கு என்ன கொடுக்கும்? என்று கேட்டார்... சிறிது நேர அமைதிக்கு பிறகு

பின்னாலிலிருந்து ஒரு பலவீனமான குரல்...

ர்ழஅந றழசம என்றது.😂😂

----------------------------------------------------

ஹா... ஹா... இது எப்படி இருக்கு?

----------------------------------------------------

மனைவிக்கிட்ட நல்ல பேரு வாங்கலாம்னு, காலையில பால அடுப்புல வெச்சுட்டு... ரொம்ப நேரமா வெயிட் பண்ணுணா... பால் பொங்கவே இல்ல...

 

அப்புறம் திறந்து பாத்தா... அது இட்லி மாவு...😣😣

 

அப்புறம் பொண்டாட்டிக்கு தெரியாம அத டிஸ்போஸ் பண்ண நான் பட்ட அவஸ்தை இருக்கே... ஐயோ... ஐயோ...😩😩

 

ஒரு கொலைக்காரன் கூட பொணத்தை மறைக்க அவ்ளோ கஷ்டப்பட்டிருக்க மாட்டான்...😫😫

----------------------------------------------------

படித்ததில் சிறந்த வரிகள்...!!

----------------------------------------------------

எந்த பூச்சி இறந்தாலும் எறும்புகளே அதை இறுதி ஊர்வலமாய் எடுத்து செல்கின்றது.

 

வேலைக்கு போகிறவர்களின் திங்கட்கிழமையைவிட வேலை கிடைக்காதவர்களின் திங்கட்கிழமை கொடூரமானவை...

 

கொட்டும் மழையில் இரண்டு விதமான பிள்ளைகள் :

 

1. அம்மா மழை வருது... ஏசியை ஆப் பண்ணுங்க...

 

2. அம்மா இங்கேயும் ஒழுகுது... பாத்திரம் கொண்டுவாங்க...

----------------------------------------------------

குட்டிக்கதை...!!

----------------------------------------------------

முதியவர் ஒருவர் ஹோட்டலுக்கு சாப்பிட சென்றார். சர்வரிடம் சாப்பாட்டின் விலை என்ன? என்று கேட்டார். சர்வர் சாப்பாடு 50 ரூபாய் என்றார்.

 

முதியவர் தன் சுருக்கு பைக்குள் கைவிட்டு பணத்தை எண்ணினார்.

 

கொஞ்சம் குறைந்த சாப்பாடு இல்லையா? எனக்கேட்டார்.

 

எரிச்சலடைந்த சர்வர் பெருசு... தயிர் இல்லாம சாப்பிடுறியா? 45 ரூபாய்தான் என்றார். பெரியவர் சம்மதித்து சாப்பிட்டார்.

 

சர்வர் பில் கொடுத்தபோது முதியவர் 50 ரூபாய் நோட்டை தட்டில் வைத்தபோது சர்வர் ஏளனமாக பார்த்தார்.

 

மீதி 5 ரூபாயை சர்வர் கொடுத்தபோது முதியவர் சொன்னார்... வெச்சிக்கோ... உனக்கு தர என்னிடம் வேறு பணமில்லை என்று...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக