Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 5 அக்டோபர், 2020

இதுக்குமேல தாங்காது.. தியேட்டர்களை மூட முடிவு! – நிறுவனம் எடுத்த அதிர்ச்சி முடிவு!

 Regal Cinemas

கொரோனா காரணமாக உலகம் முழுவதும் படப்பிடிப்பு பணிகள், திரைப்பட வெளியீடு ஆகியவை பாதிக்கப்பட்டிருப்பதால் அமெரிக்காவின் ரீகல் சினிமா தனது தியேட்டர்களை மூடுவதாக அறிவித்துள்ளது.


அமெரிக்காவின் மிகப்பெரும் சினிமா தியேட்டர் நிறுவனமாக திகழ்ந்து வருவது ரீகல் சினிமாஸ். அமெரிக்கா முழுவதும் ஆயிரக்கணக்கில் திரையரங்குகள் வைத்துள்ள இந்த நிறுவனம் கடந்த சில மாதங்களாக கொரோனா காரணமாக திறக்கப்படாமல் இருந்து வருகிறது. ஒரு சில மாகாணங்களில் திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டாலும் மக்கள் வருகை குறைவாகவே உள்ளது.

இதனால் அமெரிக்க மாகாணங்களில் உள்ள தங்களது 543 திரையரங்குகளை தற்காலிகமாக மூட ரீகல் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இந்த 543 தியேட்டர்களிலும் மொத்தமாக 7,155 ஸ்க்ரீன்கள் உள்ளன. அமெரிக்காவின் மிகப்பெரும் திரையரங்க நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக