Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 5 அக்டோபர், 2020

மூக்குத்தி அம்மன் திரைப்படம் ஒடிடியில் ரிலீஸ்...?

 


நடிகர் ஆர்கே பாலாஜி இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள புதிய திரைப்படம் மூக்குத்தி அம்மன். காமெடி கலந்த சாமி கதையை மையமாக வைத்து உருவான இந்த திரைப்படம் கடந்த மார்ச் மாதம் வெளியாகவிருந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்த திரைப்படம் கொரோனா வைரஸ் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் அப்டேட் பற்றி கிடைத்த தகவல். இந்த மூக்குத்தி அம்மன் திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் என்ற ஒடிடி இணையத்தளத்தில் வருகின்ற தீபாவளிக்கு வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆனால் தற்பொழுது ஆர் ஜே பாலாஜி ஐபிஎல் போட்டிகளில் வர்ணலயாளராக பணியாற்றி வருகின்ற நிலையில், இன்னும் சில நாட்களில் இந்த படத்திற்கான ஒப்பந்தம் உறுதியாகி விடும் என்று கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்து உறுதியான அறிவிப்பை ஆர்ஜே பாலாஜி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக