சென்னையில் கடந்த 11 நாட்களாக ஒவ்வொரு நாளும் 1,000 க்கும் மேற்பட்டோர் COVID-19 தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். தற்போது சென்னையில் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 2,400 க்கும் அதிகமாக உள்ளது.
செப்டம்பர் 23 அன்று இங்கு சிகிச்சையில் இருந்தவர்களின் எண்ணிக்கை 9,868 ஆக மட்டுமே இருந்தது. அன்று புதிதாக 980 பேர் பாதிக்கப்பட்டனர். இருப்பினும், அன்றிலிருந்து தினசரி புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகின்றது. ஒவ்வொரு நாளும் 1,000 க்கும் மேற்பட்டோர் புதிதாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். வெறும் 11 நாட்களில், சிகிச்சையில் உள்ளவர்களின் (Active Cases) எண்ணிக்கை 2,415 அதிகரித்து ஞாயிற்றுக்கிழமை 12,283 ஐ எட்டியது என மாநில சுகாதாரத் துறையின் செய்திக் குறிப்பு தெரிவிக்கின்றது.
கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷனின் (Greater Chennai Corporation) தரவுகளின்படி, திரு வி கா நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையார் மண்டலங்களில் 1,000 க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். ஆலந்தூர் மண்டலத்தில் 665 பேர் மட்டுமே சிகிச்சையில் இருந்தாலும், இதுவரை பதிவாகியுள்ள மொத்த எண்ணிக்கையில் இது 10 சதவீதமாகும்.
"நாங்கள் எங்கள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தொடர்கிறோம். தனி மனித இடைவெளியை (Social Distancing) உறுதி செய்வதிலும், பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை உறுதி செய்வதிலும் கள அதிகாரிகளுக்கு கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளோம். நாங்கள் ஒவ்வொரு நாளும் 12,000 க்கும் மேற்பட்ட மாதிரிகளை சோதித்து வருகிறோம்.” என்று ஒரு சுகாதாரத் துறை அதிகாரி கூறினார்.
தொற்றின் என்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து, குடிமை அமைப்பு நகரம் முழுவதும் 10 தெருக்களை கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவித்துள்ளது. முன்னதாக, புதிதாக பாதிக்கப்படவர்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டபோது, குடிமை அமைப்பு அனைத்து கட்டுப்பாட்டு மண்டலங்களையும் அகற்றியது. ஆலந்தூர் மண்டலத்தில் மட்டும் நான்கு கட்டுப்பாட்டு மண்டலங்கள் உள்ளன.
தரவுகளின்படி, சென்னையில் (Chennai) நகரத்தில் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் சராசரி வளர்ச்சி, 2.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. 15 நகர மண்டலங்களில், 12 மண்டலங்கள் நேர்மறையான வளர்ச்சி விகிதத்தைக் கொண்டுள்ளன. ஷோலிங்கநல்லூர், வளசரவக்கம் மற்றும் பெருங்குடி மண்டலங்களில் மட்டுமே எதிர்மறை வளர்ச்சி விகிதம் உள்ளது.
திருவொற்றியூர் மண்டலத்தில் 9.6 சதவீத வளர்ச்சி விகிதம் உள்ளது. இது மிக அதிக தொற்று வளர்ச்சி வீதம் கொண்ட மண்டலமாகும். இந்த மண்டலத்தில் 344 பேர் சிகிச்சையில் உள்ளனர். இது மொத்த என்ணிக்கையில் 7 சதவீதமாகும்.
சென்னையில் இதுவரை 3,274 இறப்புகள் COVID-19 காரணமாக பதிவாகியுள்ளன. இறப்பு விகிதம் 1.9 சதவீதமாக உள்ளது. தேனம்பேட்டை மண்டலத்தில் மட்டும் 421 பேர் இறந்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக