ஒரு கடற்கரையின் அருகில் உள்ள ஒரு செடியில் இரண்டு சிட்டுக்குருவிகள் கூடுகட்டி வாழ்ந்து வந்தது. முட்டையிடும் பருவம் வந்ததும் பெண் சிட்டுக்குருவி, ஆண் சிட்டுக்குருவியிடம், இந்தக் கூடு பாதுகாப்பானது தானா? என்று கேட்டது.
இந்தக் கூடு பாதுகாப்பானதுதான் என்றது ஆண் சிட்டுக்குருவி. அருகில் கடல் இருக்கிறதே! அது பொங்கிவந்தால் நம் முட்டைகள் அழிந்துவிடுமே! என்றது பெண் சிட்டுக்குருவி. இந்தக் கடலுக்கு என்னிடம் பகைகொள்ளும் அளவுக்குத் துணிவில்லை என்றது கர்வமாக.
அதற்கு அறிவுரை கூறும் வகையில் பெண் சிட்டுக்குருவி, உனக்கும் கடலுக்கும் வேறுபாடு இருக்கிறது. அதன் வலிமையை உன் வலிமையோடு ஒப்பிடுவது தவறு என்றது.
இரண்டொரு நாட்களில் கடல் பொங்கி வந்தது. கூட்டிலிருந்த முட்டைகளை அடித்துக்கொண்டு சென்றது. இதனைக் கண்ட பெண் சிட்டுக்குருவி பதறியது. அதற்கு ஆறுதல் கூறிய ஆண் சிட்டுக்குருவி, நீ கவலைப்படாதே! முட்டைகளை நான் மீட்டுக் கொண்டு வருவேன் என்று உறுதியளித்தது.
ஆண் சிட்டுக்குருவி, பறவைகளின் ராஜாவான கருடனிடம் சென்று முறையிட்டது. கருடராஜா தன் இறைவனான ஸ்ரீ விஷ்ணுவிடம் அறிவித்தார். ஸ்ரீ விஷ்ணு சிட்டுக்குருவியின் முட்டைகளைத் திருப்பிக் கொடுத்து விடுமாறு கடலுக்குக் கட்டளையிட்டார். இறைவனின் கட்டளைக்குப் பணிந்த கடல், அந்தச் சிட்டுக்குருவியின் முட்டைகளை மீண்டும் அதன் கூட்டில் கொண்டு வந்து வைத்தது.
குட்டிக்கதைகளும் - கட்டுரைத்தொடர்களும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக