Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 5 அக்டோபர், 2020

யானையின் அடக்க குணம்... குட்டிக்கதை... சொல்ல வரும் கருத்து என்ன?... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

----------------------------------------------------

சிரிக்கலாம் வாங்க...!!

----------------------------------------------------

சீனு : டிரைவிங் லைசென்ஸ் வாங்க எதுக்கு சாக்பீஸ் கொண்டு போன..?

ராமு : எட்டு போட்டு காட்டணும்-ல அதான்..!

சீனு : 😝😝

----------------------------------------------------

வாசகர் : ஏன் சார், ஜோக் எழுதுறேன்னு சொல்றீங்க... ஆனா ஒரு ஜோக்குக்கு கூட சிரிப்பே வரலேயே...?

எழுத்தாளர் : பிறர் சிரிக்கும்படியான காரியத்தை செய்யாதேன்னு என் தாத்தாவும், பாட்டியும் அடிக்கடி சொல்லுவாங்க... அதான்!.

வாசகர் : 😬😬

----------------------------------------------------

ராஜா : ஏன் எல்லோரும் ஓடுறாங்க?

பாபு : இதுக்கு பேர் ஓட்டப்பந்தயம். 'கப்" வாங்கணும்னு எல்லாரும் ஓடுறாங்க.

ராஜா : யார் கப் வாங்குவாங்க?

பாபு : யார் First-ஆ வராங்களோ அவங்கதான் கப் வாங்குவாங்க.

ராஜா : அப்புறம் எதுக்கு எல்லோரும் ஓடுறாங்க?

பாபு : 😳😳

----------------------------------------------------

யானையின் அடக்கம்... படித்ததில் ரசித்தது...!!

----------------------------------------------------

கோவில் யானை ஒன்று நன்றாக குளித்துவிட்டு, நெற்றியில் பட்டை போட்டுக்கொண்டு சுத்தமாக வந்து கொண்டிருந்தது.

ஒரு சிறிய பாலத்தில் அது வரும்போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி வாலை ஆட்டிக்கொண்டே வந்தது.

யானை ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழிவிட்டது. அந்த பன்றி எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம், பார்த்தாயா? அந்த யானை என்னை கண்டு பயந்துவிட்டது என்று சொல்லி சிரித்தது.

அந்த யானையை பார்த்து இன்னொரு யானை ஒரு பன்றியை பார்த்து நீ பயந்து, ஒதுங்கி நிற்கிறாயே? என்று கேட்டது.

அதற்கு அந்த யானை என்ன பதில் கூறியது தெரியுமா?

நான் தவறி விழுந்துவிட்டால் அந்த பன்றி நசுங்கிவிடும். மேலும் நான் சுத்தமாக இருக்கிறேன். பன்றியின் மேல் உள்ள சேறு என்மேல் பட்டால் நானும் அசுத்தமாகி விடுவேன். இதனால்தான் நான் ஒதுங்கிக்கொண்டேன் என்றது.

நீதி : தன் பலம், பலவீனம் தெரிந்தவர்கள் அடக்கத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள்...

----------------------------------------------------

வாழ்க்கை சொர்க்கம்...!!

----------------------------------------------------

⭐ எதற்கும் ஆசைப்படாமல்...

⭐ எதையும் எதிர்பார்க்காமல்...

⭐ இதுதான் தனக்குரியது என நினைத்தால் போதும்...

⭐ வாழ்க்கை சொர்க்கம்தான்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக