சுமார் இரண்டு வாரங்களாக புதிதாக கொரோனா தொற்று இல்லாத நிலையில் நியூசிலாந்து அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது.
உலக நாடுகளை பெரும் துயரத்தில் ஆழ்த்திய கொரோனா வைரஸ் நியூசிலாந்தையும் விட்டுவைக்கவில்லை. வைரஸ் தொற்றை தடுக்கும்
வகையில் கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. நிலைமை
கட்டுக்குள் வந்ததை அடுத்து படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இந்த சூழலில் கடந்த
ஜூன் மாதம் புதிதாக யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாததை அடுத்து கோவிட்-19
இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அனைத்து கட்டுப்பாடுகளையும் அந்நாடு
தளர்த்திக் கொண்டது. அப்போது நியூசிலாந்து பிரதமர் ஜெசின்டா ஆர்டர்ன் ஆட்டம் போட்டதெல்லாம் சர்வதேச அளவில் வைரலானது.
ஆனால் மீண்டும் வைரஸ் பரவத் தொடங்கியது. உடனே விழித்துக் கொண்ட அரசு சம்பந்தப்பட்ட
பகுதிகளில் முழு ஊரடங்கை அமல்படுத்தியது. பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி
கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியது. இதற்கு நல்ல பலன் கிடைத்தது. இந்நிலையில் நியூசிலாந்து
நாட்டின் ஆக்லாந்தில் கடந்த 12 நாட்களாக கொரோனா வைரஸ் யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் ஜெசின்டா ஆர்டர்ன், மீண்டும் ஒருமுறை வைரஸ்
பாதிப்பை விரட்டி அடித்திருக்கிறோம். ஆக்லாந்தில் நிலைமை சீரடைந்ததை அடுத்து கட்டுப்பாடுகள்
தளர்த்தப்பட்டுள்ளன.
நியூசிலாந்தின் மற்ற பகுதிகளைப் போன்று வரும் 7ஆம் தேதி நள்ளிரவு முதல் ஆக்லாந்தில்
லெவல் 1 கட்டுப்பாடுகள் அமலாகும் என்று தெரிவித்தார். கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி
கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளில் லெவல் 2ல் இருந்து லெவல் 1க்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி
நியூசிலாந்து அரசு உத்தரவிட்டது.
ஆனால் ஆக்லாந்தில் மட்டும் வைரஸ் பரவலால் லெவல் 2.5ஆக இருந்தது. இது செப்டம்பர் மாத
இறுதியில் லெவல் 2ஆக குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக