Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

சனி, 10 அக்டோபர், 2020

கன்னி ராசியில் செவ்வாய் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

கன்னி ராசியின் அதிபதி புதன் ஆவார். புதனுடன் செவ்வாய் பகை என்னும் உறவு நிலையை கொண்டு கொடுக்கும் சுப மற்றும் அசுப பலன்கள் பின்வருமாறு :

 

மன உறுதியையும், தைரியத்தையும் அளிக்கின்றார்.

 

எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.

 

வாழ்க்கையின் மீது கலை ரசனை உடையவர்கள்.

 

பொழுதுப்போக்கு நிகழ்ச்சிகள் அதிலும் உடல் பலம் வெளிப்படுத்துகின்ற கலைகளில் ஆர்வம் உடையவர்கள். 

 

உடன்பிறந்தவர்களிடம் அடிக்கடி மனக்கசப்பு உண்டாகும்.

 

தன்னைப் பற்றி மிகைப்படுத்தி கூறுவதில் வல்லவர்கள்.

 

எடுத்தச் செயலை முடிப்பதில் மிகுந்த காலதாமதத்தை ஏற்படுத்துவார்கள்.

 

தகராறு மற்றும் கலகம் செய்வதில் வல்லவர்கள். 

 

உடல் உழைப்பின்றி பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள். 

 

பிறருடைய முடிவைக் காட்டிலும் தனது முடிவிற்கு அதாவது தவறாக இருந்தாலும் சரியானதே என வாதாடக் கூடியவர்கள். 

 

எதிர்பாலின மக்கள் மீது மிகுந்த அன்பும், ஈடுபாடும் உடையவர்கள். 

 

வாழ்க்கையில் பலவிதமான போராட்டங்களையும், அதை சமாளிக்கும் திறமைகளையும் உடையவர்கள். 

 

பிரச்சனையை முடிக்க முடியாமல் இவர்களே பெரிதாக்கி கொள்வார்கள்.

 

சந்தேக குணத்தினை உடையவர்கள். 

 

முரட்டு சுபாவம் மற்றும் அலட்சிய குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். 

 

தன் மீது கொண்ட அதிக தன்னம்பிக்கையால் இவர்களே சிக்கலில் மாட்டிக்கொள்வார்கள்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!