திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் உள்ள
ஆபத்சகாயேஸ்வரர் கோயில் குரு பிரகார ஸ்தலமாக உள்ளது.
இறைவன் பெயர் : ஆபத்சகாயேசுவரர்
இறைவி பெயர் : ஏலவார் குழலியம்மை
பதிகம் : திருஞானசம்பந்தர் - 1
தல மூர்த்திகள்: அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர்,
காசி ஆரண்யேஸ்வரர்.
அருள்மிகு ஏலவார்குழலி அம்மை, உமையம்மை.
அருள்மிகு குரு தட்சிணாமூர்த்தி
அருள்மிகு கலங்காமற் காத்த விநாயகர்்.
தல வரலாறு:
பாற்க்கடல்
கடைந்தபோது உண்டான ஆலகால விஷத்தை உண்டு தேவர்களை ஆபத்திலிருந்து காப்பாற்றியதால்
ஆபத்சகாயர் என்ற பெயர் இறைவனுக்கு ஏற்பட்டது. அத்துடன் இவ்வூருக்கு ஆலங்குடி என்ற
பெயரும் ஏற்பட்டது. சிவ வழிபாடு நீங்கலாக, கிரக நிலைகளால் ஏற்படும் தீய விளைவுகளில்
இருந்து விடுபட வேண்டி பிருஹஸ்பதி அல்லது குரு பகவானை (வியாழன்) வழிபட மக்கள்
தொலைவிலும் அருகிலும் இருந்து கூட்டமாக வருகின்றனர். எல்லா வருடமும் குருப்
பெயர்ச்சியின் பொது துரதிர்ஷ்டங்களில் இருந்து விடுபெற விக்ரஹத்திற்கு மங்கள
அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.
முசுகந்தன் என்ற சோழ மன்னன், கோவில் கட்டுவதற்காக தனது மந்திரி அமுதோகரிடம் பணம்
கொடுத்தான். ஆனால் மந்திரியோ மன்னன் கொடுத்த பணத்தை பயன்படுத்தாமல் தனது பணத்தை
பயன்படுத்தி கோவில் கட்டினான். பின்னர் மன்னன் வந்து கோவில் கட்டிய புண்ணியத்தில்
பங்கு கேட்க, மந்திரி மறுத்துவிட்டார். இதனால் கோபமடைந்த மன்னன் மந்திரியின் தலைய
வெட்ட வாளை எடுத்து ஓங்க இறைவன் தோன்றி அமுதோகரை தன்னுடன் சேர்த்துக்கொண்டதே
இக்கோவில் வரலாறாகும். ஒரு முறை திருவாரூரை ஆட்சி புரிந்த சோழ மன்னன் இங்கிருந்த
சுந்தரர் சிலையின் அழகை கண்டு அதனை திருவாரூருக்கு எடுத்துச் செல்ல முயற்சித்தான்.
இதனை அறிந்த கோவில் அர்ச்சகர் அச்சிலையை குழந்தையாக பாவித்து அதற்கு அம்மை நோய்
தாக்கி இருப்பதாக கூறி மறைத்து வைத்து சிலையை காப்பாற்றினார். இப்பொழுதும் அந்த
சிலையில் அம்மைத் தழும்புகள் இருப்பதைக் காணலாம். ஆதிசங்கரர் குரு மூர்த்தியை
தரிசித்து சிவஞானம் பெற்றார். இந்திரன் முதலிய அஸ்டதிக்கு பாலகர்கள் இறைவனை
வழிபட்டு தம் பெயரால் தீர்த்தமும், சிவலிங்கமும் நிறுவி பூஜித்து தங்களுக்கு
ஏற்பட்ட இடர்பாடுகள் நீங்க பேறு பெற்றார்கள்
குரு தட்சிணாமூர்த்தியை 24 முறை வலம் வந்தும், 24 நெய் தீபங்கள் ஏற்றியும் வழிபட
குரு தோஷங்கள் நீங்கி நன்மை பெறலாம். முல்லை மலரால் அர்ச்சனை, மஞ்சள் வஸ்திரம்
சாற்றுதல், கொண்டைக் கடலைச் சுண்டல், சர்க்கரைப் பொங்கல் நிவேதனங்களுடன், கேஸ்ரநாம
அர்ச்சனை மற்றும் பாலாபிஷேகம், குரு ஹோமம் செய்ய சகல தோஷங்களும் நிவர்த்தியாகி
குரு பகவான் அருள் பெறுவர். வாரந்தோறும் வியாழக்கிழமை, தினசரி வரும் குரு ஹோரை
மற்றும் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்கள்
மற்றும் அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் குரு பகவானை வழிபடுதல் சிறந்தது.
சிறப்புக்கள்
:
குரு பரிகாரத் தலமாக விளங்கும் ஆலங்குடி மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் பெருமையுடையதாகும்.
போன்:
+91-4374-269
407
அமைவிடம் மாநிலம்
:
தமிழ் நாடு
கும்பகோணம் - நீடாமங்கலம் - மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து தெற்கே
17 கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது. நவக்கிரக ஸ்தலங்களில் ஆலங்குடி குரு
ஸ்தலமாக விளங்குகிறது.
இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல்
இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக