பணத்தை கையில் வாங்கி செலவு செய்கிறீர்களா? அப்படியானால் ஜாக்கிரதையாக இருங்கள் என்று இந்திய ரிசர்வ் வங்கி (RBI) புதிய தகவலை வெளியிட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன என்பதையும் RBI விளக்கமளித்துள்ளது.
RBI வெளியிட்ட புதிய எச்சரிக்கை தகவல்
கொரோனா தொற்றுநோய் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு தற்பொழுது படிப்படியாகத் தளர்வுகள் செய்யப்பட்டு வருகிறது. தளர்வுக்குப் பின்னர் மக்கள் மற்றும் பணப் புழக்கம் நாட்டில் அதிகரித்துள்ளதால் RBI தற்பொழுது புதிய எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது. நாட்டில் உள்ள அணைத்து மக்களையும் பாதுகாப்பாக இருக்கும்படி வலியுறுத்தியுள்ளது.
ரூபாய் மூலம் பெருந்தொற்று பரவ வாய்ப்புள்ளதா?
கடந்த மார்ச் மாதம் 9ம் தேதி அனைத்திந்திய வர்த்தகக் கழகம், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது. இந்த கடிதத்தில், மக்கள் தினமும் பயன்படுத்தும் ரூபாய் நோட்டு மற்றும் சில்லறை காசுகள் மூலம் கொரோனா பெருந்தொற்று பரவ வாய்ப்புள்ளதா? என்ற கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இந்த கேள்வியுடன் எழுதப்பட்ட கடிதம் இந்திய ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
RBI வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பு
மத்திய நிதியமைச்சகம், இந்திய ரிசர்வ் வங்கிக்கு இந்த கடிதத்தை அனுப்பி பின்னர் தற்பொழுது இதற்குப் பதில் கிடைத்துள்ளது. இது தொடர்பாக மத்திய ரிசர்வ் வங்கி ஆராய்ந்து முடிவெடுத்து, ஒரு எச்சரிக்கை தகவலை மக்களுக்குப் பதிலாக வெளியிட்டுள்ளது. RBI வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பின் படி, ரூபாய் நோட்டுகள் மற்றும் சில்லறை காசுகள் மூலம் கொரோனா பெருந்தொற்று பரவும் அபாயம் உள்ளது என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
டிஜிட்டல் ரீதியிலான பரிவர்த்தனை
இதனால், நாட்டில் உள்ள மக்களை டிஜிட்டல் ரீதியிலான பரிவர்த்தனையை மேற்கொள்ளுமாறு RBI வலியுறுத்தியுள்ளது. குறிப்பாகப் பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அதேபோல், பணப்பரிவர்த்தனையைக் குறைத்துவிட்டு டிஜிட்டல் பரிவர்த்தனையைப் பயன்படுத்த உத்தரவிட்டுள்ளது. அதேபோல், வங்கிக் கணக்கிலிருந்து அவசியமின்றி பணத்தை எடுக்க வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக