Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 6 அக்டோபர், 2020

சரும பராமரிப்பில் பாதாம் எண்ணெய்யை பயன்படுத்துவதால் கிடைக்கும் பலன்கள் !!

Almond oil

பாதாம் எண்ணெய்யில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் விட்டமின் ஏ சத்து இருப்பதால் இது உங்கள் சருமத்திற்கு ஈரப்பதம் கொடுக்கிறது. இது உங்கள் சரும துளைகளில் தேங்கியுள்ள அழுக்குகளை நீக்குவதால் கண்டிப்பாக உங்களுக்கு நல்ல பலனை கொடுக்கும். 


1/2 டீஸ்பூன் தேன் மற்றும் பாதாம் எண்ணெய்யை நன்றாக கலந்து இந்த கலவையை முகத்தில் தடவி இரவு முழுவதும் விட்டு விட வேண்டும் பிறகு காலையில் எழுந்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும் வாரத்திற்கு 2-3 முறை இதை செய்து வந்தால் மிருதுவான சருமம் கிடைக்கும்.

 

1 டீஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 1/2 டீஸ்பூன் பாதாம் எண்ணெய்யை கலந்து கொள்ளவும். இந்த கலவையை சருமத்தில் 15 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு மைல்டு க்ளீன்சர் மற்றும் வெதுவெதுப்பான நீரை கொண்டு கழுவ வேண்டும் வாரத்திற்கு 3 முறை இதை செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.

 

1 டீஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் 1 டீஸ்பூன் ப்ரவுன் சுகர் இரண்டையும் நன்றாக கலந்து இந்த ஸ்க்ரப்பை முகத்தில் தேய்த்து மசாஜ் செய்யவேண்டும். பிறகு வெதுவெதுப்பான மற்றும் குளிர்ந்த நீர் கலந்த கலவையில் அலச வேண்டும் இந்த ஸ்க்ரப்பை வாரத்திற்கு ஒரு முறை என பயன்படுத்தி வந்தால் நல்ல பலன்  கிடைக்கும்.

 

வெள்ளரிக்காயை நன்றாக மசித்து 1 டீஸ்பூன் பாதாம் எண்ணெயுடன் சேர்த்து கொள்ளவும் இந்த கலவையை முகத்தில் அப்ளே செய்து 10 நிமிடங்கள் விட்டு விடவும் பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும் வாரத்திற்கு இரண்டு முறை இந்த மாஸ்க்கை பயன்படுத்தி வந்தால் மிருதுவான பொலிவான சருமம் கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக