Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 12 அக்டோபர், 2020

Coolpad Cool 6 : பெயருக்கு ஏற்றபடி கூலான அம்சங்கள்; அமேசானில் ரெடி!

 Coolpad Cool 6 with Popup Selfie Camera, MediaTek Helio P70 SoC Launching  Soon in India via Amazon - MySmartPrice

ட்ரிபிள் ரியர் கேமரா மற்றும் பாப் அப் செல்பீ கேமராவுடன் அறிமுகமாகும் கூல்பேட் கூல் 6 ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்கள்.

கூல்பேட் நிறுவனம் விரைவில் இந்தியாவில் ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது. அது கூல்பேட் கூல் 6 என்று அழைக்கப்படும் மற்றும் இந்த ஸ்மார்ட்போன் பிரபல இகாமர்ஸ் தளமான அமேசாபி வழியாக பிரத்தியேகமாக விற்கப்படும்.

கூல்பேட் கூல் 6 ஸ்மார்ட்போனுக்கான தயாரிப்பு பக்கம் ஏற்கனவே அமேசான் இந்தியாவில் 'விரைவில் வரும்' என்கிற செய்தியுடன் லைவ் ஆக உள்ளது. அக்டோபர் 17 ஆம் தேதி முதல் அமேசானின் சிறப்பு விற்பனை தொடங்கவுள்ளதால், அதைச் சுற்றி இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கூல்பேட் கூல் 6 ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு, மீடியாடெக் ஹீலியோ பி 70 ப்ராசஸர் மற்றும் 6 ஜிபி ரேம், பாப்-அப் செல்பீ கேமரா மற்றும் பல கவனிக்கத்தக்க அம்சங்கள் உள்ளன.

அமேசானில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள படத்தின்படி, கூல்பேட் கூல் 6 ஸ்மார்ட்போன் அதன் பின்புறத்தில் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்போடு வரும்.

மேலும் ஸ்மார்ட்போனை பின்புறத்தில் கைரேகை சென்சார் ஒன்றும் உள்ளது. முன்பக்கத்தை பொறுத்தவரை, இதில் பாப்-அப் செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது. ப்ளூ மற்றும் சில்வர் உள்ளிட்ட இரண்டு வண்ண விருப்பங்களில் இது அறிமுகமாகும் என்று வெளியான பட்டியல் தெரிவிக்கிறது.

அம்சங்களுக்கு வரும்போது, அமேசான் பட்டியலின்படி, கூல்பேட் கூல் 6 ஸ்மார்ட்போனில் 48 மெகாபிக்சல் பிரைமரி லென்ஸ், 2 மெகாபிக்சல் செகண்டரி ஷூட்டர் மற்றும் மற்றொரு 2 மெகாபிக்சல் சென்சார் ஆகியவற்றின் கலவையுடன் மூன்று ஏஐ கேமராக்கள் பொருத்தப்படும்.

இதன் பின்புற கேமரா அமைப்பானது நைட் மோட், எச்.டி.ஆர், யு.எச்.டி, ப்ரோ, பனோரமா மற்றும் இன்டெலிஜெண்ட் ஸ்கேனிங் உள்ளிட்ட பல்வேறு மோட்களுடன் வரும்.

முன்பக்கத்தில், 21 மெகாபிக்சல் பாப்-அப் செல்பீ கேமரா உள்ளது, இது நைட் மோட், எச்டிஆர், யுஎச்.டி ப்ரோ மோட், பில்டர்ஸ் மற்றும் பியூட்டி மோட் உடன் வரும்.

இது தவிர்த்து, வெளியான அமேசான் பட்டியலில் கூல்பேட் கூல் 6 ஆனது மீடியா டெக் ஹீலியோ பி 70 ப்ராசஸர் மூலம் இயக்கப்படும் என்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் என்கிற இரண்டு ஸ்டோரேஜ் வகைகளில் வரும்.

இந்த விவரங்களைத் தவிர, டிஸ்பிளே, பேட்டரி மற்றும் ஓஎஸ் போன்ற விவரங்கள் பற்றி அமேசான் பட்டியல் எதுவும் சொல்லவில்லை. உத்தியோகபூர்வ வெளியீட்டுக்கு முன்னதாக இந்த விவரங்கள் விரைவில் வெளிவரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

இதற்கு முன்னதாக கூல்பேட் நிறுவனம் அதன் கூல் 5 ஸ்மார்ட்போனை கடந்த ஆண்டு இந்தியாவில் ரூ.7,999 க்கு அறிமுகப்படுத்தியது.

இது 6.22 இன்ச் எச்டி + டிஎஃப்டி-ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 19: 9 என்கிற அளவிலான திரை விகிதம், டியூட்ராப் நாட்ச், 1520 x 720 பிக்சல்கள் தீர்மானம், மீடியாடெக் ஹீலியோ பி 22 ஆக்டா கோர் ப்ராசஸர், ஆண்ட்ராய்டு 9 பை, 4000 எம்ஏஎச் பேட்டரி, 13MP + 2MP டூயல் ரியர் கேமரா அமைப்பு, 16 எம்பி ஏஐ பியூட்டி செல்பீ கேமரா போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.



இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக