Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 12 அக்டோபர், 2020

ஆன்லைனில் ஆர்டர் செய்த பூனைகுட்டி.,பார்சலில் வந்த புலிக்குட்டி-ஒரு வாரமா வீட்டுல வளர்த்துருக்காங்க!

  சவானா வகை பூனையை வாங்க விருப்பம்

ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வீட்டுக்கு வந்த பூனைக்குட்டியை ஒரு வாரமாக வளர்த்த குடும்பம். அந்த பூனைக்குட்டியின் செயலில் மாற்றம் இருக்கவே இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரில் இது பூனைக்குட்டியல்ல புலிக்குட்டி என தெரியவந்துள்ளது.

ஆன்லைன் ஆர்டர்

ஆன்லைன் ஆர்டர் வழக்கம் மக்களிடையே அதிகரித்துக் கொண்டே வருகிறது. மளிகை பொருட்களில் தொடங்கி, மருந்து, உணவு, உடை, கேட்ஜெட் பொருட்கள் உட்பட அனைத்தும் ஆன்லைனில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த கொரோனா காலத்தில் ஆன்லைன் ஆர்டர் தேவை அதிகரிதுள்ளது என்றே கூறலாம்.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தம்பதிகள்

இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தம்பதிகள் உலக புகழ் பெற்ற சவானா வகை பூனைக் குட்டியை வளர்க்க ஆசைப்பட்டுள்ளது. பூனைக்குட்டி வகைகளில் சவானா வகை பூனை பிரபலமடைந்தது இது புலி குட்டியை போன்றே இருக்கும் பூனைக்குட்டியாகும்.

சவானா வகை பூனைக்குட்டி

சவானா வகை பூனைக்குட்டி உலகில் பிரபலமானவை. இவை புலிக்குட்டி போலவே வளரும் பூனைக்குட்டி வகையாகும். சவானா வகை பூனைக்குட்டியை வளர்க்க துறைமுக நகரமான லு ஹவ்ரே, நார்மண்டி பகுதியை சேர்ந்த தம்பதிகள் விருப்பப்பட்டுள்ளனர்.

சவானா வகை பூனையை வாங்க விருப்பம்

இதன்காரணமாக பிரான்ஸ் நாட்டு துறைமுக நகரமான லு ஹவ்ரே, நார்மண்டியை சேர்ந்த தம்பதிகள் ஆன்லைன் விளம்பரத்தை பார்த்து சவானா வகை பூனையை வாங்க விரும்பினர். சவானா பூனை பிரான்சில் செல்லப்பிராணியாக வளர்க்க சட்டப்பூர்வமானது. ஆன்லைன் மூலமாக சவானா பூனைக்குட்டியை ஆர்டர் செய்துள்ளனர். இதற்கு சுமார் 6000 யூரோக்களை செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆன்லைனில் ஆர்டர் செய்த பூனை

ஆன்லைனில் ஆர்டர் செய்த பூனை வீட்டுக்கு வந்துள்ளது. பூனைக்குட்டியை ஆசை ஆசையாக தம்பதிகள் வளர்க்கத் தொடங்கினர். ஒரு வாரத்தில் பூனைக்குட்டியின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்துள்ளது. இது அந்த தம்பதிகளை சந்தேகமடையச் செய்துள்ளது.

விலங்கியல் நிபுணர்கள் சோதனை

இதையடுத்து பூனைக்குட்டி குறித்து காவல்துறையினருக்கு தகவலளிக்கவே காவல்துறையினர் விலங்கியல் நிபுணர்களை அழைத்து வந்த சோதனை மேற்கொண்டனர். இதில் இது பூனைக்குட்டி அல்ல சுமத்ரன் வகை புலிக்குட்டி என்பது தெரியவந்திருக்கிறது.

புலிக்குட்டி மீட்பு

இதுகுறித்து தம்பதியினரிடம் தெரிவிக்கே அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து தம்பதிகளிடம் இருந்த புலிக்குட்டி மீட்கப்பட்டு வன உயிரியல் காப்பதுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பது பேர் கைது

இதுகுறித்து பிரான்ஸ் ப்ளூ அறிக்கையின்படி இந்த சம்பவம் தொடர்பாக ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளது. பூனை என்று புலிக்குட்டியை வாங்கிய தம்பதியினர் போலீஸாரால் விடுவிக்கப்பட்டனர். அதே நேரத்தில் விலங்கு கடத்தலின் சங்கிலியை புலனாய்வாளர்கள் கண்டுபிடித்து வருகின்றனர்.

 



இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக