Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 27 அக்டோபர், 2020

ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட Google Pay.. காரணம் என்ன தெரியுமா?

ஆப் ஸ்டோரில் இருந்து கூகிள் பே நீக்கம்

கூகிள் பே பயணிப்பதில் ஏகப்பட்ட பரிவர்த்தனைகள் தொடர்ந்து தோல்வியடையும் காரணத்திற்காக, கூகிள் பே பேமெண்ட் ஆப்ஸ் தற்பொழுது ஆப்பிள் நிறுவனத்தின் ஆப் ஸ்டோரிலிருந்து முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் இந்த செயலுக்குக் கூகிள் நிறுவனம் பொறுப்பாகப் பதில் அளித்துள்ளது.


ஆப் ஸ்டோரில் இருந்து கூகிள் பே நீக்கம்

ஆப்பிள் ஐபோன் பயனர்கள் ஆப் ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்த கூகிள் பே பயன்பாட்டைப் பயன்படுத்தும் பொழுது எதிர்கொள்ளும் பரிவர்த்தனைகளில் பல பரிவர்த்தனைகள் தோல்வியுற்றதால், ஏராளமான புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்காலிகமாக அகற்றப்பட்டுள்ளது

இதற்காக, கூகிள் நிறுவனத்தின் மொபைல் பேமெண்ட் பயன்பாடான கூகிள் பே இந்தியாவில் உள்ள ஆப்பிளின் ஆப் ஸ்டோரிலிருந்து தற்காலிகமாக அகற்றப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து கூகிள் பே பயன்பாடானது தற்போதைக்கு அகற்றப்பட்டதைத் தொடர்ந்து ஆப்பிள் ஐபோன் பயனர்கள் ஃபோன் பே, பேடிஎம், பிஹிம் யுபிஐ போன்ற பயன்பாடுகளை தற்பொழுது பயன்படுத்தத் துவங்கியுள்ளனர்.

கூகிள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

கூகிள் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "குறைந்த எண்ணிக்கையிலான ஆப்பிள் iOS பயனர்கள் தங்கள் பரிவர்த்தனைகளில் தொடர்ந்து பணம் செலுத்துவதில் தோல்விகளைச் சந்திக்க நேரிட்டுள்ளது. இந்த கோளாறை எங்கள் குழு விரைவாகச் சரிசெய்ய வேலை செய்து வருகிறது.

மன்னிப்பு

இதற்கிடையில், பாதிக்கப்பட்ட பயனர்கள் கூகிள் நிறுவனத்தின் Google Pay ஆதரவு மூலம் புகார்களைப் பதிவு செய்யலாம். பயனர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கோருகிறோம்." என்று கூறியுள்ளார்.

இதற்கு முன்பும் கூகிள் பே நீக்கம் செய்யப்பட்டுள்ளதா?

இதற்கு முன்பும் கூகிள் பே பயன்பாடு சில காலத்திற்கு ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து அகற்றப்பட்டுள்ளது, ஆனால், கோளாறுகள் விரைவாகச் சரிசெய்யப்பட்டு மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஆனால், இம்முறை ஏற்பட்டுள்ள கோளாறு சரிசெய்யக் கூடுதல் காலம் எடுக்கப்பட்டுள்ளது.

 

ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கோளாறே இல்லை..

இப்பொழுது நீக்கம் செய்யப்பட்ட பயன்பாடு மீண்டும் எப்போது ஆப் ஸ்டோரிற்கு வரும் என்பது குறித்து எந்த வார்த்தையும் வெளியிடப்படவில்லை. கூகிள் பே பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

கூகிள் நிறுவனத்தின் இப்போதைய அறிவுரை

கூகிள் பே iOS பயனர்கள் பயன்பாட்டை இன்னும் அன்-இன்ஸ்டால் செய்யவில்லை என்றால் சேவையைத் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும் பரிவர்த்தனை கோளாறு சரிசெய்யப்படவில்லை என்பதனால் தற்போதைக்கு ஆப்ஸை பயன்படுத்த வேண்டாம் என்று கூகிள் கேட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக