Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

சனி, 24 அக்டோபர், 2020

Jio Phone பயனர்களுக்கு ஒரு குட் நியூஸ்; இனி ஜாலியாக கிரிக்கெட் பார்க்கலாம்!

 


ஜியோ போன் பயனர்களுக்காக JioCricket எனப்படும் பிரத்யேக கிரிக்கெட் ஆப் அறிமுகம். இதன் நன்மைகள் என்ன, இதை அணுகுவது எப்படி, இதோ முழு விவரங்கள்...

 

ஜியோ போன் பயனர்கள் ஜியோ கிரிக்கெட் என்கிற பிரத்யேகமான கிரிக்கெட் ஆப்பைப் பெற்றுள்ளனர். இந்த புதிய ஆப் ஒரே "கூரையின்" கீழ் லைவ் ஸ்கோர்ஸ், மேட்ச் அப்டேட்ஸ் மற்றும் கிரிக்கெட் செய்திகள் மற்றும் வீடியோக்களுக்கான அணுகலை வழங்குகிறது.

ஜியோ போனில் உள்ள ஜியோ கிரிக்கெட் ஆப் ஆனது பல இந்திய மொழிகளிலும் வருகிறது, மேலும் வரவிருக்கும் கிரிக்கெட் போட்டிகளை பற்றிய விவரங்களை காண அனுமதிக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜியோ போன் பயனர்கள் ஜியோ கிரிக்கெட் பயன்பாட்டின் மூலம் ஜியோ கிரிக்கெட் ப்ளே அலோங் (Jio Cricket Play Along) விளையாட்டிலும் பங்கேற்கலாம்.

நவம்பர் 10 ஆம் தேதி திட்டமிடப்பட்ட இறுதிப் போட்டியை எட்டிவிட்ட இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டியின் மத்தியில் ஜியோ போனுக்கான ஜியோ கிரிக்கெட் ஆப் சற்றே தாமதமாக அறிமுகமாகி இருந்தாலும் கூட, நிச்சயமாக நல்ல வரவேற்பை பெறும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

ஜியோ போனுக்கான ஜியோ கிரிக்கெட் பயன்பாடு மொத்தம் ஒன்பது மொழிகளில் கிடைக்கிறது. அவைகள் தமிழ், பெங்காலி, ஆங்கிலம், குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி மற்றும் தெலுங்கு ஆகும்.



மேலே குறிப்பிட்ட, பயன்பாட்டிற்குள் அணுக கிடைக்கும், ஜியோ கிரிக்கெட் ப்ளே அலோங் கேம் ஆனது ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே அணுகக்கூடியதாக இருக்கும்.

ஜியோ கிரிக்கெட் பயன்பாட்டின் முக்கிய நோக்கங்களில் ஒன்று, ஜியோ போன் பயனர்களுக்கு நேரடி கிரிக்கெட் அப்டேட்களை வழங்குவதே ஆகும்.

பயனர்கள் லைவ் ஸ்கோர்ஸ் மற்றும் நடப்பு போட்டி தொடர்பான சமீபத்திய செய்திகளைப் பார்க்கலாம். மேலும், இந்த ஆப் பல்வேறு வீடியோக்களையும், வரவிருக்கும் மேட்ச் சார்ந்த தகவல்களை காணும் விருப்பம் போன்ற அம்சங்களையும் பட்டியலிடுகிறது.

ஜியோ கிரிக்கெட் பயன்பாட்டில் ஜியோ கிரிக்கெட் ப்ளே அலோங் விளையாட்டிற்கான பிரத்யேக பகுதியும் அடங்கும், இது குறிப்பிட்ட போட்டிக்கான அப்டேட்களை கணிக்க பயனர்களை அனுமதிக்கிறது. இந்த விளையாட்டில் ரூ.50,000 வரையிலான ரிலையன்ஸ் வவுச்சர் பரிசுகள் கிடைக்கும்.

இது ஜியோ கிரிக்கெட் பயன்பாட்டின் ஹோம் பேஜின் கேம்ஸ் பிரிவின் கீழ் கிடைக்கிறது. Jio Store ஐப் பார்வையிடுவதன் மூலம் உங்கள் ஜியோ போனில் JioCricket ஆப்பை நீங்கள் பதிவிறக்கம் செய்யலாம்.

குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 

இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக