Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 12 அக்டோபர், 2020

Netflix, Amazon Prime, Disney Hotstar எல்லாமே இலவசம்! மோதி விளையாடும் ஜியோ!

Reliance Jio Rs 399 postpaid plus

முகேஷ் அம்பானி, இந்தியாவின் டெலிகாம் துறையில் வலது கால் வைத்ததில் இருந்து, டெலிகாம் நிறுவனங்களுக்குள் ஒவ்வொரு நாளும், ஏன் ஒவ்வொரு நிமிடமும் போட்டி தான்.

அதிக வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வது யார், தரமான சேவைகளை வழங்குவது யார், வாடிக்கையாளர்கள் மூலம் அதிக வருவாய் ஈட்டுவது யார் என எல்லாமே போட்டியாகிவிட்டது.

இப்போதும் அப்படி ஒரு போட்டியைப் பற்றித் தான் பார்க்கப் போகிறோம். இது 399 ரூபாய் போஸ்ட் பெய்ட் திட்டத்தில் நடக்கும் போட்டி.

ஓடிடி + யூ டியூப்

லாக் டவுன் இன்னும் முழுமையாக தளர்த்தப்பட்டதாகத் தெரியவில்லை. இப்போது தான் மெல்ல திரை அரங்குகளை எல்லாம் திறக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இந்த நெருக்கடியான, மன அழுத்தம் அதிகமாக இருக்கும் இந்த கால கட்டத்தில் நமக்கு எல்லாம் கொஞ்சம் ஆறுதலைக் கொடுத்தது ஆன்லைன் ஓடிடி செயலிகள் மற்றும் யூடியூப் தான் என்றால் அது மிகை இல்லை.

399-ல் மோதி விளையாடும் கம்பெனிகள்

ஆக, மக்களை, தங்கள் கம்பெனி பக்கம் இழுக்க, ரிலையன்ஸ் ஜியோ தொடங்கி, பார்தி ஏர்டெல், வொடாபோன் ஐடியா வரை பலரும் பல திட்டங்களை அறிவித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள். அதில் 399 ரூபாய்க்கு இந்த மூன்று கம்பெனிகளும் அறிவித்து இருக்கும் திட்டம் மும்முனைப் போட்டியாக இருக்கிறது. சுருக்கமாக 399 ரூபாய் திட்டத்தை வைத்து எல்லா கம்பெனிகளும் மோதி விளையாடுகிறது எனலாம்.

ரிலையன்ஸ் ஜியோவின் திட்டம்

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ கம்பெனி 399 ரூபாய் போஸ்ட் பெய்ட் ப்ளஸ் (Post Paid Plus) திட்டத்தை அறிவித்து இருக்கிறார்கள். இந்தியர்களை சுண்டி இழுக்கும் விதத்தில், இந்த 399 ரூபாய் திட்டத்தை, ஒரு அதிரடி கவர்ச்சித் திட்டமாகக் கொண்டு வந்து இருக்கிறது ஜியோ. அப்படி இந்த திட்டத்தில் என்ன அதிரடி இருக்கிறது? வாருங்கள் பார்ப்போம்.

Reliance Jio Rs 399 postpaid plus

வேலிடிட்டி பில் சுழற்சி

75 ஜிபி டேட்டா

டேட்டா ரோல் ஓவர் 200 ஜிபி

அளவற்ற வாய்ஸ் கால்

அளவற்ற எஸ் எம் எஸ்

ஜியோ அப்ளிகேஷன்கள் இலவசம்

ஜியோ பிரைமுக்கு 99 ரூபாய் செலுத்த வேண்டுமாம். இதை எல்லாம் விட ஸ்பெஷல் ஐட்டம் ஒன்றை வைத்திருக்கிறார்கள்.

எல்லாமே இலவசம்

நெட்ஃப்ளிக்ஸ் (Netflix), அமேசான் ப்ரைம் (Amazon Prime), டிஸ்னி ஹாட் ஸ்டார் விஐபி (Disney+ Hotstar VIP) போன்ற ஓடிடி-க்களுக்கான சப்ஸ்கிரிப்ஷன்களையும் இலவசமாகக் கொடுக்கிறார்களாம். இது தான் மாஸ் காட்டி, இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் சுண்டி இழுக்கும் சிறப்பு அம்சம்.

Bharti Airtel Rs 399 postpaid plan

ஏர்டெல் கம்பெனியின் 399 ரூபாய் போஸ்ட் பெய்ட் திட்டத்தில், 40 ஜிபி அதிவேக டேட்டா, நாள் ஒன்றுக்கு 100 எஸ் எம் எஸ், அளவற்ற வாய்ஸ் கால் போன்ற அடிப்படைச் சேவைகளைக் கொடுக்கிறார்கள். அதோடு ஏர்டெல் எக்ஸ்ட்ரீம், விங்க் மியூசிக், ஷா அகாடமி போன்றவைகளுக்கான சப்ஸ்கிரிப்ஷன்களையும் கொடுக்கிறார்களாம். டேட்டா ரோல் ஓவர் வசதி இருக்கிறது.


வொடாபோன் ஐடியா

வொடாபோன் ஐடியா கம்பெனியின் 399 ரூபாய் போஸ்ட் பெய்ட் திட்டத்தில், அளவற்ற கால்கள், 40 ஜிபி அதிவேக டேட்டா வழங்குகிறார்கள். எஸ் எம் எஸ் சேவைக்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டுமாம். டேட்டா ரோல் ஓவர் வசதி இருக்கிறது. வேறு எந்த சலுகைகளோ அல்லது சப்ஸ்கிரிப்ஷன்களோ கொடுக்கிறார்களாம்.

அதிரடி காட்டும் ஜியோ

பெரும்பாலான இளைஞர்கள், ரிலையன்ஸ் ஜியோ கம்பெனி கொடுக்கும் நெட்ஃப்ளிக்ஸ் (Netflix), அமேசான் ப்ரைம் (Amazon Prime), டிஸ்னி ஹாட் ஸ்டார் விஐபி (Disney+ Hotstar VIP) போன்ற ஓடிடி-க்களில் ஒன்றையாவது சப்ஸ்கிரைப் செய்து வைத்திருப்பார்கள். ஜியோ தெளிவாக, இந்த ஓடிடி-யை வைத்து, வாடிக்கையாளர்களை ஈர்க்கத் தொடங்கி இருக்கிறது. ஜியோ கொடுக்கும் சலுகைகளுக்கு முன், மீண்டும் ஏர்டெல் & வொடாபோன் ஐடியா செய்வதறியாமல் தடுமாறிக் கொண்டு இருக்கிறார்கள் போலிருக்கிறதே

 



இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக