நாட்டின் மற்றும் உலகப் புகழ்பெற்ற தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் (Mukesh Ambani) குழும நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், கோவிட் நெருக்கடிக்கு மத்தியில் தனது பெட்ரோலிய பிரிவுகளில் அமலில் இருந்த ஊதியக் குறைப்புகளை ரத்து செய்துள்ளது. செய்யப்படும் பணிக்கு ஏற்ப ஊழியர்களுக்கு செயல்திறன் போனஸ் வழங்கவும் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
தகவல்களின்படி, நிறுவனம் அடுத்த ஆண்டின் வேரியபிள் சேலரியில், 30 சதவிகிதத்தை முன்கூட்டியே ஊழியர்களுக்கு வழங்க முன்வந்துள்ளது. இது கோரானா காலத்தில் ஊழியர்கள் ஆற்றும் பணியைப் பாராட்டியும் அவர்களது உழைப்புக்கு ஒரு ஊக்குவிப்பாகவும் வழங்கப்படுகிறது. நிறுவனத்தின் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த சலுகையின் மூலம் பயனடையக்கூடும்.
ஏப்ரல் மாதத்தில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance Industries) நிறுவனம் தனது ஹைட்ரோகார்பன் (பெட்ரோலியம்) பிரிவில் பத்து முதல் 50 சதவீதம் வரை ஊதியக் குறைப்பைச் செயல்படுத்தியது. அந்த நேரத்தில், நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தனது முழு சம்பளத்தையும் தொற்று காரனமாக விட்டுவிடுவதாக அறிவித்தார். பண போனஸ் மற்றும் வேலை அடிப்படையிலான சலுகைகளை செலுத்துவதையும் நிறுவனம் ஒத்திவைத்தது. நிறுவனம் பொதுவாக நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்த கொடுப்பனவுகளைச் செய்கிறது.
பெட்ரோலியப் பிரிவில் இந்த சம்பள குறைப்பை முடிவுக்கு வர, நிறுவனம் வேறு ஏதேனும் ஒரு பிரிவில் இருந்து பணத்தை ஏற்பாடு செய்திருக்க வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
கொரோனா நெருக்கடி காரணமாக, ஏராளமான நிறுவனங்கள் சம்பளத்தை குறைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சில நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை பணிநீக்கம் செய்தன. ஆனால் இப்போது நிலைமை இயல்பு நிலைக்கு வரத் தொடங்கி பொருளாதாரத்தின் சக்கரம் மீண்டும் பாதையில் செல்லத் துவங்கியுள்ள நிலையில், நிறுவனங்கள் சம்பள குறைப்புகளை திரும்பப் பெற்று ஊழியர்களை வேலைக்கு அமர்த்திக் கொண்டிருக்கின்றன.
குறிப்பு: படங்கள் அனைத்தும் மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக