Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 28 அக்டோபர், 2020

பெண்ணின் பிறப்புறுப்பை எப்படியெல்லாம் சுத்தமாக வைத்துக் கொள்ளலாம்?... செய்ய வேண்டியது என்ன?

 பெண்: Latest பெண் News and Updates, Videos, Photos, Images and Articles

இந்த கட்டுரையில் உங்கள் யோனியை பராமரிப்பது எப்படி என்று பார்ப்போம் வாருங்கள். இந்த சின்னஞ்சிறு செயல்களை பின்பற்றினால் உங்கள் யோனி எந்த அசௌகரியங்களுக்கும் ஆளாகாமலும் , ஆரோக்கியமாகவும் இருக்கும்.

 

யோனி தன்னை தானே சுத்திகரித்து கொள்ளும் உறுப்பு தான் என்றாலும் அதற்கு சிறப்பு கவனம் கொடுத்து பராமரிக்க வேண்டும். எனவே முகம் மற்றும் முடிக்கு சிரத்தை எடுத்து பராமரிப்பது போல யோனியையும் பராமரிக்க வேண்டும். அப்போது தான் உங்கள் யோனி தொற்றுகளுக்கு உள்ளாகாமல் இருக்கும். மேலும் மகப்பேறு காலத்திலும் ஆரோக்கியமாக இருக்கலாம்.


இப்போது எளிமையான , பயனுள்ள 5 பராமரிப்பு செயல்களை பற்றி குறிப்பிடுகிறோம். இதை பின்பற்றி உங்கள் யோனியை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும்.

​1.மசகு எண்ணெயை (lubricant) பயன்படுத்துங்கள்

 

உங்கள் யோனி வறட்சியாக இல்லை என்றாலும் கலவியின் போது மசகு எண்ணெயை பயன்படுத்துவது நலம். இதை பயன்படுத்துவதால் உங்களுக்கு கலவியின் போது இன்பம் அதிகரிக்கும். மேலும் உராய்வினால் ஏற்படும் அசௌகரியங்களை தடுக்கும்.

ஆனால் " Sexually Transmitted Diseases " இதழில் வெளியான ஆராய்ச்சி கட்டுரையில் அடிக்கடி மசகு எண்ணெயை பயன்படுத்தினால் STIs(Sexually Transmitted Infections) ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று சொல்கிறது. எனவே இயற்கையாக கிடைக்கும் மசகு பொருளான தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை பயன்படுத்தினால் நீண்ட காலத்திற்கு நன்மை பயக்கும்.

​2. சரியாக சுத்தம் செய்யுங்கள்

 

யோனி தன்னை தானே சுத்திகரித்து கொள்ளும் உறுப்பு என்பது பெரும்பாலான பெண்களுக்கு தெரியும். எனவே அதை சுத்தப்படுத்த ஆடம்பரமான பொருட்கள் தேவை இல்லை. எனவே வழலை (soap) மற்றும் சுத்தமான தண்ணீர் கொண்டு யோனியை சுத்தம் செய்தல் போதுமானது மட்டுமல்ல அவசியமும் கூட.

உங்களுக்கு சென்சிடிவ் தோல் என்றால் யோனியை சுத்தம் செய்ய சந்தையில் கிடைக்கும் பொருட்களை வாங்காதீர்கள். வாசனை நிறைந்த அந்த பொருட்களில் ரசாயனப் பொருட்கள் அதிகம் கலக்கப்பட்டு இருக்கும். அந்த ரசாயனங்கள் யோனியை சுற்றியுள்ள பகுதிகளையும் பாதிக்கும்.

​3. அசௌகரியத்தை தரும் உள்ளாடையை அணியாதீர்கள்

 

ஒரு உள்ளாடை எவ்வளவு அழகாக இருந்தாலும் , அழகான சரிகை கொண்டு நெய்யப்பட்டிருந்தாலும் பருத்தி துணியினாலான உள்ளாடையை பயன்படுத்துவதே சிறந்தது. Obstetrics and Gynaecology என்னும் இதழில் வெளியான கட்டுரையில் பாலியஸ்டர் அல்லது செயற்கை இழை கொண்டு தயாரிக்கப்பட்ட உள்ளாடையை அணிந்தால் ஈஸ்ட் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

​4. யோனியை மென்மையாக சுத்தம் செய்யுங்கள்

 

"மென்மையாக கையாளுங்கள்" என்பதே உங்களின் கருவாய் (vulva)மற்றும் யோனியை கையாளும் போது நீங்கள் பின்பற்ற வேண்டிய உலகளாவிய விதி. அதை கழுவும் போதும் , துடைக்கும் போது மென்மையாக கையாளுங்கள். அழுத்தி அல்லது துரிதமாக செயல்படுவதாக எண்ணி அவசரமாக துடைத்தால் , சென்சிடிவ் ஆன கருவாய் திசுக்கள் சேதமடைந்து விடும். எனவே யோனியை கவனமாக கையாளுங்கள்.

​5. டவுச்சிங்கிற்கு (douching)

 

நாம் ஏற்கனவே இருமுறை கூறியது போல யோனி தன்னை தானே சுத்திகரித்து கொள்ளும் உறுப்பு. எனவே எதற்காக டவுச்சிங் செய்ய வேண்டும்? National Women's Health Information Centre -ன் கூற்றுப்படி யார் டவுச்சிங் செய்கிறார்களோ அவர்களுக்கு பாக்டீரியல் வஜினோசிஸ் மற்றும் STDs(Sexually Transmitted Diseases)ஏற்படும் வாய்ப்புகள் டவுச்சிங் செய்யாதவர்களை காட்டிலும் அதிகமாக உள்ளது.

வெள்ளைப்படுதல் மிகவும் இயல்பானது. அதை தண்ணீரை அல்லது வேறு பொருளை கொண்டு பீய்ச்சி அடித்து வெளியேற்றாதீர்கள்.அதுமட்டுமின்றி டவுச்சிங் நல்ல பாக்டீரியாவையும் சேர்த்து அழித்து விடும் . இதனால் pH சமநிலை குலைந்து விடும். ஆக , பெண்களே ! மேலே கூறியவற்றை பின்பற்றி பாருங்கள். யோனியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 

இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக