SBI வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல செய்தி, பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் இது மிகவும் அற்புதமான செய்தியாகும். SBI டெபிட் கார்டு பயனர்களுக்கு இப்போது EMI வசதி அவர்களின் டெபிட் கார்டுடன் வழங்கப்படும் என்று SBI வங்கி தெரிவித்துள்ளது. இனி ஆன்லைன் ஷாப்பிங் செய்ய உங்கள் டெபிட் கார்டே போதும்.
நெருங்கி வரும் பண்டிகை காலத்தில் அனைவருக்கும் ஏராளமான செலவுகள் காத்திருக்கிறது. வீட்டில் உள்ள அனைவருக்கும் ஷாப்பிங் செய்ய வேண்டும், வங்கி கணக்கில் எவ்வளவு இருப்பு உள்ளது, என்ன-என்ன வாங்கலாம் என்று பலரும் தங்களின் பட்ஜெட்டை இப்போதிலிருந்தே கணக்கிடத் துவங்கி இருப்பீர்கள். SBI வாடிக்கையாளர்களுக்கு இந்த முறை ஷாப்பிங் பற்றிய கவலை தேவையில்லை.
ஏனெனில், SBI தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய டெபிட் கார்டுக்கு ஒரு புதிய சிறப்பு வசதியை அறிமுகம் செய்துள்ளது. வீட்டு உபகரணங்கள் அல்லது ஆன்லைன் ஷாப்பிங் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இந்த புதிய வசதி பெரிதும் பயனளிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. SBI வாடிக்கையாளர்களுக்கு இனி டெபிட் கார்டுடன் EMI வசதி கிடைக்கும் என்று வங்கி அறிவித்துள்ளது.
EMI வசதியுடன் ஆன்லைன்
ஷாப்பிங்
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் டெபிட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த டெபிட் கார்டுகள் இப்பொழுது கூடுதல் சக்திவாய்ந்ததாக மாற்றப்பட்டுள்ளது. இனி டெபிட் கார்டுகள் மூலம் பயனர்கள் EMI வசதியுடன் ஆன்லைன் ஷாப்பிங் செய்துகொள்ளலாம். இனி எளிதாக தவணை முறையில் வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பி பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்.
சில டெபிட் கார்டுக்கு இன்னும் கிடைக்கவில்லையா?
சமீபத்திய அறிவிப்புப் படி SBI வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு டெபிட் கார்டுகளில் இப்பொழுது முதல் அங்கீகரிக்கப்பட்ட EMI வசதியை வாடிக்கையாளர்கள் பெறுவார்கள் என்று வங்கி அறிவித்துள்ளது. இருப்பினும் இன்னும் சில டெபிட் கார்டுக்கு இந்த சேவை ஆக்டிவேட் ஆகவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், நிச்சயம் அனைவரும் வங்கியிலிருந்து இந்த தகவல்களைப் பெறுவீர்கள்.
டிவிட்டர் மூலம் அறிவிப்பு
SBI வங்கி தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தின் மூலம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. SBI தனது தேர்ந்தெடுக்கப்பட்ட பல வாடிக்கையாளர்களுக்கு முன்பே ஆன்லைன் ஷாப்பிங்கிற்கான EMI வசதியை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கியை நேரடியாக சென்று அணுகுங்கள்
இந்த புதிய வசதி மூலம் வாடிக்கையாளர்கள் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் போன்ற ஆன்லைன் ஷாப்பிங் தளங்களிலிருந்து பொருட்களைத் தவணை முறையில் வாங்கலாம். ஒருவேளை உங்களுக்கு இந்த சேவை இன்னும் கிடைக்கவில்லை என்றால் அருகில் உள்ள வங்கியை நேரடியாக சென்று அணுகுங்கள்.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக