Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 21 நவம்பர், 2020

பாகிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்ட 1300 ஆண்டுகள் பழமையான விஷ்ணு கோயில்..!!!

பாகிஸ்தானில்  கண்டுபிடிக்கப்பட்ட 1300 ஆண்டுகள் பழமையான விஷ்ணு கோயில்..!!!

1300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஒரு இந்து கோயிலை பாகிஸ்தான் மற்றும் இத்தாலிய தொல்பொருள் நிபுணர்கள்,  வடமேற்கு பாகிஸ்தானின் ஸ்வாட் மாவட்டத்தில் உள்ள ஒரு மலையில் கண்டுபிடிக்கத்துள்ளனர். பாரிகோட் குண்டாயில் அகழ்வாராய்ச்சியின் போது, ​​நிபுணர்கள் இந்த கோவிலைக் கண்டுபிடித்துள்ளனர்.

கைபர் பக்துன்க்வாவின் தொல்பொருள் துறையின் ஃபஸல் காலிக் விஷ்ணுவின் 1300 ஆண்டுகள் பழமையான கோயில் கண்டுபிடிப்பை அறிவித்தார். பாகிஸ்தானின் (Pakistan) ஸ்வாட் மாவட்டத்தில் உள்ள இந்த கோவில் விஷ்ணுவின் கோயில் என்று குறிப்பிட்டார். இந்த கோயில் 1300 ஆண்டுகளுக்கு முன்பு இந்து ஏகாதிபத்திய ஆட்சி காலத்தில் இந்துக்களால் கட்டப்பட்டது என்று கூறினார்.

இந்து ஷாஹி அல்லது காபூல் ஷாஹி (கி.பி 850-1026) என்பது காபூல் பள்ளத்தாக்கு (கிழக்கு ஆப்கானிஸ்தான்), காந்தர் (நவீனகால பாகிஸ்தான்) மற்றும் இன்றைய வடமேற்கு இந்தியாவை ஆண்ட ஒரு இந்து வம்சமாகும்.

அகழ்வாராய்ச்சியின் போது, ​​தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கோயில் இடத்திற்கு அருகில் கோபுரங்களையும் கண்டறிந்துள்ளனர். இது தவிர, கோயிலுக்கு (Temple) அருகில் ஒரு  குளத்தையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர், இது இந்துக்கள் வழிபாட்டுக்கு முன்பு குளிக்க பயன்படுத்தப்பட்டது.

'ஸ்வாட் மாவட்டம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான தொல்பொருள் இடங்களைக் கொண்டுள்ளது, மேலும் இப்பகுதியில் முதல் முறையாக இந்து அரச காலத்தின் தடயங்கள் கிடைத்துள்ளன' என்று ஃபசல் கலிக் கூறினார். இத்தாலிய தொல்பொருள் ஆராய்ச்சி திட்டத்தின் தலைவரான டாக்டர் லூகா, 'ஸ்வாட் மாவட்டத்தில் காணப்படும் காந்தர் நாகரிகத்தின் முதல் கோயில் இதுவாகும்' என்றார்.

ஸ்வாட் மாவட்டத்தில் பல சுற்றுலா (Tourism) இடங்கள் உள்ளன. இயற்கை அழகு, மத சுற்றுலா, கலாச்சார சுற்றுலா மற்றும் தொல்பொருள்  முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் போன்ற அனைத்து வகையான சுற்றுலாவையும் கொண்டிருக்கும் பாகிஸ்தானின் முதல் 20 இடங்களில், ஸ்வாட் மாவட்டம் ஒன்றாகும். ஸ்வத் மாவட்டத்தில் பௌத்த மத வழிபாட்டுத் தலங்களும் உள்ளன.


 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக