நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகள் நவம்பர் 26 அன்று வேலை நிறுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளன.
வங்கிகளில் டெபாசிட் விகிதங்களுக்கு வட்டி விகிதம் அதிகரிக்கப்படுகிறது. ஆனால் வங்கிக் கட்டணங்கள் அதிகரிக்கப்படாமலேயே உள்ளது என்று இது குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வரவிருக்கும் நவம்பர் 36ம் தேதி தொழில் சங்கங்கள் பொது வேலை நிறுத்தத்தினை அறிவித்துள்ளன.
தனியார்மயம் வேண்டாம்
இந்த நிலையில் தான் பொதுத்துறை வங்கிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வங்கி, காப்பீடு உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயப்படுத்துவதைக் கைவிட வேண்டும். ரயில்வே, பாதுகாப்புத் துறை, தொழிற்சாலைகள், துறைமுகங்கள் போன்ற அரசுத் துறை நிறுவனங்களை கார்ப்பரேட் நிறுவனங்களாக மாற்றுவதைக் கைவிட வேண்டும்.
அவுட்சோர்ஸிங் பணி வேண்டாம்
மேலும் வங்கி பணிகளை அவுட்சோர்சிங் கொடுப்பதை நிறுத்த வேண்டும். இதன் மூலம் வங்கி ஊழியர்களின் வேலைகளை ஆதரிக்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளை வலுப்படுத்த வேண்டும்.
அதுமட்டும் அல்ல, வருமான வரி செலுத்தும் அளவுக்கு வருவாய் இல்லாத அனைத்துத் தொழிலாளர் குடும்பங்களுக்கும் மாதம் ரூ.7,500 உதவித் தொகை வழங்க வேண்டும். ஒரு நபருக்கு மாதம் ஒரு முறை 10 கிலோ அரிசி, கோதுமை வழங்க வேண்டும். விவசாயிகள், தொழிலாளர்கள் நலனுக்கு எதிரான வேளாண் சட்டங்களையும், தொழிலாளர் சட்டத் தொகுப்புகளையும் திரும்பப் பெற வேண்டும்.
கட்டாய ஓய்வு வேண்டாம்
மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தில் ஆண்டுக்கு 200 நாட்கள் வேலையை உயர்த்தி, நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்து, அதில் வழங்கப்படும் குறைந்தபட்சக் கூலியை அதிகரிக்க வேண்டும். அரசு மற்றும் பொதுத்துறை பணியாளர்கள் உரிய வயது மூப்படையும் முன்பாகவே, கட்டாய ஓய்வு தருவதற்கான அரசு நிர்வாக சுற்றறிக்கைகளைத் திரும்ப பெற வேண்டும்.
பழைய ஓய்வூதிய திட்டம்
அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டப்படி ஓய்வூதியம் வழங்க வேண்டும். குடும்ப நல நிதியுடன் இணைந்த ஓய்வூதியத்தை அதிகரித்து மேம்படுத்த வேண்டும். உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன் வைத்து, மத்திய தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் செய்யவுள்ளன.
திட்டமிட்டு செயல்படுங்கள்
ஆக நவம்பர் 26ம் தேதி செய்யபடவுள்ள இந்த வேலை நிறுத்தத்தில், பல வங்கி ஊழியர்களும் கலந்து கொள்ளலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக வங்கி சேவைகள் பாதிக்க வாய்ப்புள்ளது. ஆக அதற்கேற்றவாறு உங்களது பரிவர்த்தனைகளை திட்டமிட்டுக் கொள்ளலாம்.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக