Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 18 நவம்பர், 2020

நின்ஜா எச்2ஆர் பைக் எஞ்சினுடன் உருவாக்கப்பட்ட கவாஸாகி ஹெலிகாப்டர்!

 நின்ஜா எச்2ஆர் பைக் எஞ்சினுடன் உருவாக்கப்பட்ட கவாஸாகி ஹெலிகாப்டர்!

வாஸாகி நிறுவனம் தனது நின்ஜா எச்2ஆர் சூப்பர் பைக் எஞ்சினுடன் கூடிய அதிவேக ஹெலிகாப்டரை உருவாக்கி உள்ளது. இந்த புதிய ஹெலிகாப்டரின் ஆரம்ப கட்ட சோதனை செய்யும் முயற்சிகளில் குறிப்பிடத்தக்க வகையில் அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ஜப்பானை சேர்ந்த கவாஸாகி நிறுவனம் பைக் தயாரிப்பு, சிறிய விமானத் தயாரிப்பு, விமான எஞ்சின் தயாரிப்பு என பல்வேறு பிரிவுகளுடன் செயல்பட்டு வருகிறது. மேலும், கவாஸாகி நிறுவனத்தின் பெரும்பான்மையான வருவாய் என்பது விமானத் தயாரிப்பு துறை மூலமாகவே வருகிறது.

இந்த நிலையில், ஆள் இல்லாமல் செல்லும் புதிய ஹெலிகாப்டர் மாடல் ஒன்றை கவாஸாகி நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. கே - ரேஸர் என்ற பெயரில் குறிப்பிடப்படும் இந்த ஹெலிகாப்டர் புதுமையான அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.


பிற ஹெலிகாப்டர்களை போலவே 4 மீட்டர் அளவிலான ரோட்டர் மேல்புறத்தில் பொருத்தப்பட்டு இருக்கிறது. இருப்பினும், பின்புறத்தில் வால்பகுதியில் தனியாக ரோட்டர் எதுவும் பொருத்தப்படவில்லை. இதற்கு பதிலாக, சிறிய விமானங்களில் இருப்பது போன்று இறக்கை அமைப்பு பொருத்தப்பட்டு பக்கத்திற்கு ஒரு ரோட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதாவது, சிறிய வகை விமானம் மற்றும் ஹெலிகாப்டர் ஆகியவற்றை கலந்து கட்டியது போன்று டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது.


மேலே உள்ள ரோட்டர் மட்டுமின்றி, முன்னோக்கி செல்வதற்கான விசையை பக்கவாட்டு ரோட்டர்கள் வழங்கும் என்பதுடன் திசை திருப்புவதற்கான வாய்ப்பையும் வழங்கும்.


இந்த புதிய கே ரேஸர் ஹெலிகாப்டரில் முக்கிய அம்சமாக, கவாஸாகியின் பிரபலமான நின்ஜா எச்2ஆர் பைக்கில் பயன்படுத்தப்படும் எஞ்சின்தான் 300எச்பி திறனை வழங்கும் விதத்தில் மாறுதல்கள் செய்யப்பட்டு இந்த ஹெலிகாப்டரில் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய ரோட்டர்கள் அமைப்பு மூலமாக சாதாரண ஹெலிகாப்டரைவிட இந்த வகை ஹெலிகாப்டர் அதிவேகத்தில் செல்வதற்கான வாய்ப்பை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், சோதனைகள் முழுமையாக முடிந்த பின்னரே, எவ்வளவு வேகத்தில் அதிகபட்சமாக தொடும் வல்லமை கொண்டுள்ளது என்பது தெரிய வரும்.

தற்போது செயல்விளக்கத்திற்கான மாடலாகவே கே ரேஸர் ஹெலிகாப்டர் உருவாக்கப்பட்டுள்ளது. ஆள் இல்லாமல் இயங்கும் வகையில் இந்த ஹெலிகாப்டர் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

எனினும், தரையில் இருந்து நேரடியாக எழும்பி பறக்கும் தொழில்நுட்பம், ஆள் இல்லாமல் இயங்கும் தொழில்நுட்பம், பைலட் மூலமாக இயக்கும் தொழில்நுட்பங்களை தொடர்ந்து பரிசோதித்து தரவுகளின் அடிப்படையில் மேம்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக