கூகுள் பிக்சல் 4ஏ புதிய பேர்லி ப்ளூ வண்ண விருப்ப மாறுபாடு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் உலகளவில் பிளாக் வண்ண வேரியண்டில் அறிமுகப்படுத்தப்பட்டவையாகும்.
கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன்
கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் மாதம் உலகளவில் பிளாக் வண்ண விருப்பத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் அக்டோபர் மாதம் இந்திய சந்தையை எட்டியது. இந்த நிலையில் கூகுள் பிக்சல் 4ஏ சாதனத்தின் புதிய பேர்லி ப்ளூ வேரியண்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய வண்ண மாறுபாடு
கூகுள் பிக்சல் 4ஏ புதிய வண்ண மாறுபாடு அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது பேர்லி ப்ளூ (Barely Blue) வண்ண விருப்பம் ஆகும். அமெரிக்காவின் கூகுள் ஸ்டோரில் இருந்து இந்திய மதிப்பின்படி ரூ.25,970 ஆக விற்பனைக்கு கிடைக்கிறது.
ஜஸ்ட் பிளாக் வண்ண விருப்பம்
புதிய வண்ண விருப்பங்களை தவிர மற்ற அனைத்தும் பிக்சல் 4ஏ ஜஸ்ட் பிளாக் வண்ண விருப்பங்களை போன்றே உள்ளது. இந்த சாதனம் 5.8 அங்குல முழு எச்டி ப்ளஸ் ஓஎல்இடி டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.
கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு
2340 x 1080 பிக்சல்கள் தீர்மானம், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு அம்சம் ஆகியவற்றை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இதில் 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதி இருக்கிறது.
8 மெகாபிக்சல் செல்பி கேமரா
இரட்டை பின்புற கேமராக்கள் மற்றும் 8 மெகாபிக்சல் செல்பி கேமராவுடன் வருகிறது. செல்பி கேமராவிற்கு பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளே வடிவமைப்பும் உள்ளது. அதோடு போர்ட்ரெய்ட் லைட் அம்சமும், எக்ஸ்ட்ரீம் பேட்டரி சேவர் பயன்முறையும் இதில் உள்ளது. இதன் பேட்டரி ஆயுள் 48 மணி நேரம் வரை நீடிக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக