கூகுள் நிறுவனம் தொடர்ந்து தேவையற்ற ஆப் வசதிகளை நீக்கிய வண்ணம் உள்ளது என்று தான் கூறவேண்டும். சில ஆப் வசதிகள் மக்களுக்கு தேவையில்லாத சிக்கல்களை கொண்டுவருகிறது. எனவே தான் சிக்கல்களை ஏற்படுத்து ஆப் வசதிகளை தொடர்ந்து நீக்கிய வண்ணம் உள்ளது கூகுள் நிறுவனம்.
குறிப்பாக இந்தியாவில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வாகன கடன், வீட்டு கடன், சொத்து மீதான கடன், தனி நபர் கடன் என வெவ்வேறு வகையான கடன்களை கொடுத்து வருகிறது. இருந்தபோதிலும் அந்த கடனை ஒரு பெறுவதற்கு சில தகுதிகளை அந்த நிறுவனங்கள் கொண்டுள்ளன. அதை பூர்த்தி செய்பவர்களுக்கு மட்டுமே கடனும் கொடுக்கப்படுகிறது.
மேலும் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு டிஜிட்டல் முறையில் ஒருவரின் kyc-யை மட்டும் அடிப்படையாக கொண்டு ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன்கள் மூலம் கடன் கொடுக்கும் அரசால் அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களும் உள்ளன. பின்பு அண்மை காலமாக அது மாதிரியான அப்ளிகேஷன்கள் கூகுள் பிளே ஸ்டோரில் உலாவிக் கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இதன் மூலம் கடன் வாங்கியவர்களை அந்த அப்ளிகேஷன் நிறுவனங்கள் காட்டுகின்றன அடாவடி தர்ம சங்கடத்தில் ஆழ்த்தி வருவதாகவும் இணையத்தில் புகார்கள் பறக்கின்றன. குறிப்பாக ஊரடங்கு சமயத்தில் தான் இது மாதிரியான ஆப் மூலம் கடன் வழங்கும் நடைமுறை அதிகரித்துள்ளது. இந்த அப்ளிகேஷன்கள் இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தணையில் கோலோச்சி வரும் நிறுவனங்களின் பெயரை போலவே கிட்டத்தட்ட இருப்பதால் மக்களும் அறியாமையினால் இதில் சிக்கி கொள்கிறார்கள். பின்பு 4 லட்சம் முதல் 10 லட்சம் பேர் வரை இந்த அப்ளிகேஷன்களை டவுன்லோட் செய்து பயன்படுத்தியுள்ளனர்.
பின்பு இந்த அப்ளிகேஷன்கள் குறித்த ஆராய்ந்த போது இவை அனைத்தும் ரிசர்வ் வங்கியின்
கட்டுப்பாட்டின் கீழ் இல்லை எனவும், சீன நிறுவனமான அலிபாபாவின் கீழ் இதன் சர்வர்கள்
இயங்குகின்றன. கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் முயற்சியாக கூட இது நடந்திருக்கலாம் என்கிறார்
நிதி சார்ந்த தொழில்நுட்ப வல்லுனரான ஸ்ரீகாந்த்.
கூகுள் நிறுவனம் சார்பில், பயனரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது எங்களது முதன்மை கொள்ளை. அதானல் நிதி சேவை சார்ந்த கொள்கைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் அத்து மீறுபவர்கள் மீது நடவடிக்கை நிச்சயமாக எடுக்கப்படும் என்று கூகுள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதுபோன்ற அப்ளிகேஷன்களில் கடன் வாங்கி பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான செய்திகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்றன. இனி வரும் காலங்களில் கூகுள் நிறுவனம் தனது பிளே ஸ்டோர் கொள்கைகளை வலுப்படுத்தினால் அப்பாவி மக்கள் கண்டிப்பாக இதுமாதிரியான சிக்கல்களில் சிக்காமல் இருப்பார்கள் எனவும் நிதித்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்சமயம் Ok Cash, Go Cash, Flip ECash, SnapltLoan என ஐந்து ஆப் வசதிகள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கியுள்ளது நமது கூகுள் நிறுவனம்.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக