Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 10 நவம்பர், 2020

பேப்பர் கப்பில் தினமும் தேநீர் குடிக்கிறீர்களா? உடலுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்துகிறீர்கள்!

 Paper Tea cups drink are not safe to health | பேப்பர் கப்பில் தினமும்  தேநீர் குடிக்கிறீர்களா? உடலுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்துகிறீர்கள்! |  News in Tamil

தேநீர் குடிக்க பேப்பர் கப் யூஸ் பண்றீங்களா..  தினமும் நீங்கள் தவறாமல் டீ குடிக்கிறீர்களா? நீங்கள் உடலுக்கு எவ்வளவு சேதம் செய்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஒரு பேப்பர் கோப்பையில் தவறாமல் தேநீர் குடிக்கிறீர்களா? அப்படியானால், கவனமாக இருங்கள். ஏனெனில் இந்த பழக்கம் உங்கள் உடலுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்துகிறது.

மிகவும் ஆப்பத்தானது

இது மிகவும் ஆப்பத்தானது. பேப்பர் கப்கள் குடிப்பதற்கு பாதுகாப்பானவை அல்ல. அவற்றில் மூன்று கப் டீ குடிப்பவர், சுமார் 75,000 நுண்ணிய மைக்ரோபிளாஸ்டிக் துகள்களை உட்கொள்கிறார் என்று கரக்பூர் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT) கண்டறிந்துள்ளது.

பேப்பர் கப்பி‌ல் ஹைட்ரோபோபிக் பூசப்படுகின்றன

காகிதக் கோப்பைகளில் பொதுவாக மெல்லிய அடுக்கு ஹைட்ரோபோபிக் பொருளால் பூசப்படுகின்றன. அவை பெரும்பாலும் பிளாஸ்டிக் (பாலிஎதிலீன்) மற்றும் சில சமயங்களில் கோ-பாலிமர்களால் ஆனது.

சூடான தேநீரை அல்லது காப்பி:

கோப்பையில் சூடான தேநீரை அல்லது காப்பியை ஊற்றும் போது, மைக்ரோபிளாஸ்டிக் அடுக்கு கரைந்து, தேநீர் அல்லது காப்பியுடன் கலந்து நமது வயிற்றுக்குள் செல்கிறது.

மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள்:

25,000 மைக்ரான் அளவிலான (10 µm முதல் 1000 µm) மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் 100 மில்லி சூடான திரவத்தில் (85 - 90 டிகிரி சி)  கலப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

கண்ணுக்குத் தெரியாத 75,000 சிறிய மைக்ரோபிளாஸ்டிக்

ஆகையால், ஒரு சராசரி நபர் தினமும் 3 வழக்கமான கப் தேநீர் அல்லது காபி குடிக்கிறார் என வைத்துக் கொண்டால், ஒரு காகிதக் கப்பில், மனித கண்ணுக்குத் தெரியாத 75,000 சிறிய மைக்ரோபிளாஸ்டிக் துகள்களை உட்கொள்கிறார் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

சுற்று சூழலுக்கும் பெரும் பாதிப்பு:

இதனை உட்கொள்ளும்போது, ​​உடல்நல பாதிப்புகள் மிக தீவிரமாக இருக்கலாம் என இந்த ஆராய்ச்சி கூறுகிறது. மேலும் இவை சுற்று சூழலுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக