Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 27 நவம்பர், 2020

மேஷ ராசியில் சுக்கிரன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

 

உங்களின் குடும்ப வாழ்க்கையை தீர்மானிக்கும் சுக்கிரன் !!

🌟 பிருகு மைந்தன் என்றும் அசுரர்களின் குரு என்றும் அழைக்கப்படும் சுக்கிராச்சாரியார் உலக இன்பங்களை அனுபவித்து வாழ வழி காட்டக்கூடியவர். தேவகுருவான பிரகஸ்பதியை போன்றே சுக்கிராச்சாரியாரும் வேதங்கள் மற்றும் சாஸ்திரங்கள் பற்றி நன்கு அறிந்தவர். இனி இவர் 12 ராசிகளில் நின்று செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை காண்போம்.

கிரகத்தை பற்றிய சில குறிப்புகள் : 

🌟 தந்தை : பிருகு மகரிஷி

🌟 தாய் : கியாதி

🌟 உகந்த நாள் : வெள்ளிக்கிழமை

🌟 சுக்கிரனின் பிரதி அதிபதி : மகாலட்சுமி

🌟 சுக்கிரனின் மனைவி : ஜெயந்தி

🌟 வசிக்கும் இடம் : படுக்கை அறை

🌟 வலிமை உடைய பொழுது : பகல் பொழுது 

🌟 ராசியை கடக்கும் காலம் : ஒரு மாதம்

🌟 சுக்கிரனின் நட்பு கிரகங்கள் : புதன், சனி, ராகு, கேது 

🌟 சுக்கிரனின் பகை கிரகங்கள் : சூரியன், சந்திரன் 

🌟 சுக்கிரனின் சமமான கிரகங்கள் : செவ்வாய், குரு

🌟 சுக்கிரனின் தசா காலங்கள் : 20 வருடங்கள்

🌟 சுக்கிரனின் நட்சத்திரங்கள் : பரணி, பூரம், பூராடம்

குணங்கள் : 

🌟 ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரனின் நிலையினைக் கொண்டு அவருக்கு ஏற்படும் குடும்ப வாழ்க்கை, வசதி வாய்ப்புகள், பொருட்சேர்க்கை, போக சுகம் முதலியவற்றை அறிந்து கொள்ள இயலும்.

🌟 இனி வரும் நாட்களில் சுக்கிரன் ஒவ்வொரு ராசியிலும் இருந்தால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை காண்போம்.

 

மேஷ ராசியில் சுக்கிரன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

🌟 மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் பகவான் ஆவார். செவ்வாய்க்கு சுக்கிரன் சமம் என்ற நிலையில் நின்று செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை பற்றி காண்போம்.

🌟 மனைவியின் மீது அன்பும், பாசமும் கொண்டவர்கள்.

🌟 ஏற்ற, இறக்கமான கல்வி நிலையை கொண்டவர்கள்.

🌟 கண் சம்பந்தமான பிரச்சனைகள் அடிக்கடி வரும்.

🌟 வரவை விட செலவை அதிகம் செய்யக்கூடிய நபராக இருப்பார்கள். 

🌟 எதிர்பாலின மக்களால் செலவும், சில சங்கடங்களும் தோன்றிக்கொண்டே இருக்கும். 

🌟 வாக்கில் சுத்தம் என்பது குறைவு.

🌟 வாதம் புரிவதில் மன்னர்கள்.

🌟 தனக்கு தெரியாத விஷயங்கள் எதுவும் இல்லை என்று தன்னைத்தானே பெருமைப்படுத்தி கொள்வார்கள்.

🌟 எப்போதும் சுத்தமான ஆடைகளையும், மற்றவர்களை கவரும் விதத்தில் தேவையான அலங்காரத்துடனும், வசீகரமாகவும் பேசக்கூடியவர்கள்.

🌟 கற்பனை சக்தி மிகுந்தவர்கள். சிலர் கவிதை எழுதுவதில் வல்லவர்கள். 

🌟 சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி எண்ணங்களையும், தனது செயல்களையும் மாற்றிக் கொள்ளக்கூடியவர்கள். 

🌟 பேச்சுகள் மூலம் எதையும் சமாளித்துக் கொள்ளக்கூடியவர்கள். பொருள் ஈட்டும் வழியை நன்கு அறிந்தவர்கள்.

🌟 எவரிடமும் கடன் வாங்கும் சாமர்த்தியம் உடையவர்கள். 

🌟 வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் குறைவு. 

🌟 வாசனைக் கொண்டே உணவின் ருசியை சொல்லக்கூடியவர்கள். 

🌟 குளிர்ந்த நிலையில் உள்ள உணவு பொருட்களை விரும்பி உண்ணக்கூடியவர்கள்.

🌟 எடுத்த முடிவில் நிலையாக இல்லாமல் அடிக்கடி மாறும் எண்ணங்களை கொண்டவர்கள்.

🌟 தான் நினைத்ததை நிறைவேற்றிக்கொள்ள எந்த நிலைக்கும் செல்லக்கூடியவர்கள்.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!