Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 27 நவம்பர், 2020

லேட் மேரேஜ்-னா இதுதானா? இதை கொஞ்சம் ட்ரை பண்ணுங்க பாஸ்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-----------------------------------------------------

சிரிக்க சிரிக்க சிரிப்பு...!!

-----------------------------------------------------

சேகர் : என்னுடைய அலாரக்கடிகாரம் முதல்முறையாக இன்று என்னை எழுப்பியது.

கிருஷ்ணன் : எப்படி?

சேகர் : என் மனைவி அதைக்கொண்டு என் மண்டையில் ஓங்கி ஓர் அடி கொடுத்தாள்.

கிருஷ்ணன் : 😄😄

-----------------------------------------------------

சுரேந்தர் : எனக்கு லேட் மேரேஜ்!

தனபால் : காலங்கடந்த வயசுல கல்யாணமா?

சுரேந்தர் : அப்படி இல்ல, பத்து மணிக்கு நடக்க வேண்டிய மேரேஜ் பத்தரை மணிக்கு நடந்துச்சு!

தனபால் : 😛😛

-----------------------------------------------------

ஆசிரியர் : மாலா, ஆறில் பத்து போகுமா?

மாலா : போகும் சார்!

ஆசிரியர் : எப்படி?

மாலா : எங்க வீடு, ஆத்துக்குப் பக்கத்துலதான் சார் இருக்கு. எங்கம்மா தினமும், பத்துப் பாத்திரத்தை அங்கே தான் தேய்ப்பாங்க.

ஆசிரியர் : 😖😖

-----------------------------------------------------

தகவல் களஞ்சியம்...!!

-----------------------------------------------------

விரலை ரப்பரால் கட்டினால் அப்பகுதி குளிர்ந்து விடுகிறதே... ஏன்?

விரலையோ, கை, கால்களையோ ரப்பர் அல்லது கயிற்றால் இறுகக் கட்டினால் அந்த இடம் குளிர்ந்து போய்விடுகிறது. இதற்கு ரத்த ஓட்ட தடையே காரணம். அதாவது மனித உடலின் நிறமும், வெப்பமும், உடலின் பல பாகங்களினுள் ரத்தம் மூலம் பயணித்துக் கொண்டிருக்கும்.

இதுபோன்ற நேரங்களில் விரல் நுனியை நாம் இறுகக் கட்டிவிட்டால் அப்பகுதிக்கு ரத்தம் பாய்வது தடைபடும். இதனால் ரத்தம் பாயாத அப்பகுதி வெளிறிவிடும். உடலுக்குத் தேவையான வெப்பத்தைத் தரும் ரத்தத்தின் ஹீமோகுளோபின் அங்கு இல்லாத காரணத்தினால் குளிர்ந்து விடுகிறது. இதுவே குளிர்ச்சிக்கு காரணம்.

-----------------------------------------------------

கொஞ்சம் ட்ரை பண்ணுங்க பாஸ்...!!

-----------------------------------------------------

💫 கருகும் சருகும் உருகும் துகிரும் தீயில் பட்டால்.

💫 துள்ளும் கயலோ வெள்ளம் பாயும் உள்ளக் கவலை எள்ளிப்போகும்.

💫 மேல் ஏழு ஓலை கீழ் ஏழு ஓலை ஆகப்பதினாலு ஓலைகள்.

-----------------------------------------------------

குறளும், பொருளும்...!!

-----------------------------------------------------

புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்

ஏறுபோல் பீடு நடை.

பொருள் :

புகழைக் காக்க விரும்பும் மனைவி இல்லாதவருக்கு, இகழ்ந்து பேசும் பகைவர் முன் காளை போல் நடக்கும் பெருமித நடை இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக