எச்எம்டி குளோபல் இந்தாண்டு இறுதிக்குள் பல ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் நோக்கியா 2.4 மற்றும் நோக்கியா 3.4 அறிமுகம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் நோக்கியா 9.3 பியூர்வியூ, நோக்கியா 6.3 மற்றும் நோக்கியா 7.3 ஆகியவை டிசம்பர் மாதம் அறிமுகமாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நோக்கியா 7.3 5ஜி
நோக்கியா 7.3 5ஜி இந்தாண்டின் பிற்பகுதியில் அறிமுகமாகும் என நோக்கியா பவர் பயனர் அறிக்கை தெரிவித்தது. இந்த வெளியீட்டு நிகழ்வின்போது கூடுதலாக இரண்டு ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும் என தற்போது தகவல்கள் தெரிவிக்கிறது. நோக்கியா 9.3 ப்யூர்வியூ அறிமுகப்படுத்த நிறுவனம் தயாராகி வருவதாக நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோக்கியா 9.3 பியூர்வியூ ஸ்மார்ட்போன்
நோக்கியா 9.3 பியூர்வியூ ஸ்மார்ட்போன் 2கே ரெசல்யூஷன் 6.29 இன்ச் அளவு கொண்ட க்யூஎச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவுடன் வரும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. நோக்கியா 9.3 ப்யூர்வியூ ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் மூலம் வரும் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் வருகிற மாடல்களில் பொருத்தப்பட்டிருக்க வாய்ப்பில்லை என தெரிவிக்கப்படுகின்றன.
108 எம்பி முதன்மை கேமரா
நோக்கியா 9.3 ப்யூர்வியூ ஸ்மார்ட்போன் 108 எம்பி முதன்மை கேமராவுடன் 8கே ரெக்கார்டிங் ஆதரவுடன் வரும் என கூறப்படுகிறது. சந்தையில் கிடைக்கும் சிறந்த கேமரா ஸ்மார்ட்போன்களில் இதுவும் ஒன்றாக இருக்கும். இந்த ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் க்விக் வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பம் இருக்கும் என கூறப்படுகிறது.
6.5 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே
நோக்கியா 7.3 5ஜி 6.5 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவுடன் வரும். இது 6 ஜிபி ரேம் கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 690 5ஜி சிப்செட் மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 48 எம்பி முதன்மை கேமரா, 24 எம்பி இரண்டாம் நிலை கேமரா கொண்டிருக்கும் எனவும் 32 எம்பி செல்பி கேமரா கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.
நோக்கியா 6.3 குவாட் கேமரா அமைப்பு
நோக்கியா 6.3 குவாட் கேமரா அமைப்புடன் வரும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 16 எம்பி செல்பி கேமரா இருக்கும் எனவும் ஸ்னாப்டிராகன் 670 அல்லது 675 செயலி மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் விலை ரூ.22,015 ஆக இருக்கும் எனவும் இதில் 4000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக