ஆர் ஜே பாலாஜி மற்றும் சரவணன் ஆகியோர் இயக்கத்தில் நயன்தாராவின் நடிப்பில் தீபாவளிக்கு வெளிவந்த திரைப்படம் தான் ‘மூக்குத்தி அம்மன்’. இந்தப்படம் கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் என்ற OTT தளத்தில் வெளியானது.
இந்தப் படத்தில் இந்து போலி சாமியார்கள் எப்படியெல்லாம் பொது மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியிருப்பார் ஆர்ஜே பாலாஜி. மேலும் தமிழ்நாட்டில் பரபரப்பை கிளப்பி வந்த இரண்டு இந்து சாமியார்களின் கலவையாக ஒரு நெகட்டிவ் சாமியார் கதாபாத்திரத்தை உருவாக்கி, அவரை வைத்து கதையை நகர்த்தினார் ஆர் ஜே பாலாஜி.
இந்நிலையில் மூக்குத்தி அம்மன் படத்தில் இந்து மதத்தை மட்டுமே கிண்டல் அடித்துள்ளனர் என்ற குற்றச்சாட்டு இந்தப்படத்தின் மீது வைக்கப்பட்டுள்ளது.
அதாவது இந்தப் படம் OTTயில் வெளியாவதற்கு முன்பு, போலி கிறிஸ்தவ மதபோதகர்கள் செய்யும் ஏமாற்று வேலைகளை கிண்டலடித்து இடம்பெற்ற காட்சி ஒன்றை யூடியூபில் வெளியிட்டிருந்தனர் படக்குழுவினர். ஆனால் அந்த காட்சி படத்தில் இடம் பெறவில்லை.
மேலும் பாலாஜி அந்தக்காட்சியை பாகுபாடு பார்த்து தான் நீக்கினார் என்று கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பெரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
அது மட்டுமில்லாமல், ‘மற்ற மதத்தைச் சேர்ந்தவரின் உணர்வுகளை மதிக்கும் நீங்கள் இந்து மதத்தையும் அவர்களுடைய உணர்வுகளையும் ஏன் மதிக்க தவருகிறீர்கள்?’ என்று பலர் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இவ்வாறு கடும் சர்ச்சைகள் எழுந்ததை தொடர்ந்து அந்தக் காட்சியை யூட்யூப்பில் இருந்து கூட நீக்கி விட்டனர் படக்குழுவினர்.
மேலும் ஆர்ஜே பாலாஜிக்கும் ஐசரி கணேஷ்கும் பெரும்புள்ளி ஒருவர் போன் செய்து அந்த காட்சியை நீக்கும்படி கேட்டுக் கொண்டதால்தான், படத்திலிருந்தும் யூட்யூப்பிலிருந்தும் அந்த காட்சியை நீக்கி விட்டார்கள் என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.
எனவே ஆர் ஜே பாலாஜி இயக்கி நடித்திருக்கும் மூக்குத்தி அம்மன் படத்திற்கு பெரும் கண்டனங்கள் எழுந்ததால் பயங்கர அப்செட்டில் இருக்கிறார்களாம் படக்குழுவினர்.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்உள்ளூர் முதல் உலகம் வரை , பொழுதுபோக்கு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக